இன்று நாட்டில் 79வது சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு இன்று காலை டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசிய கொடியை ஏற்றி வைத்து உரையாற்றினார். அப்போது rss ஐ புகழ்ந்து பேசினார்.
நூறு ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்ட ஆர்எஸ்எஸ் உலகின் மிகப்பெரிய அரசு சாரா நிறுவனம் என்று தெரிவித்தார். ஒரு நூற்றாண்டு காலமாக நமக்கு உத்வேகம் அளித்து வருகிறது என்றும் கூறினார்.
தேசத்தை தனிநபர்கள் மூலம் கட்டி எழுப்ப வேண்டும் என்ற உறுதியோடு தாய்நாட்டின் நலனுக்காக ஆர்எஸ்எஸ் உறுப்பினர்கள் தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்ததாகவும் குறிப்பிட்டார். நூறு ஆண்டு கால சேவை என்று கூறிய பிரதமர் மோடி, ஒரு பெருமைமிக்க பொற்காலம் என்றும் கூறினார். மேலும் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்தை புகழ்ந்து பேசி இருந்தார்.

இதற்கு பல்வேறு அரசியல் கட்சியினர் கடும் விமர்சனங்களை முன்வைத்தனர். மோடிக்கு அடுத்த மாதம் 75 வயது ஆக உள்ள நிலையில் ஆர்எஸ்எஸ்-ஐ தூக்கிப்பிடித்து ஓய்வு வயதை தள்ளி போட நினைப்பதாகவும், பிரதமர் மோடியின் அடுத்த கட்ட நகர்வு இது என்றும் தெரிவித்து வருகின்றன.
இந்த நிலையில், காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெயராம் ரமேஷ் கடுமையாக சாடினார். செங்கோட்டையில் ஆர்.எஸ்.எஸ்-ஐ மோடி புகழ்ந்தது அரசியலமைப்பு, மதச்சார்பற்ற குடியரசின் உணர்வை அப்பட்டமாக மீறிய செயல். என்று தெரிவித்தார்m அடுத்த மாதம் 75 வயதை எட்ட உள்ளதால், தனது பதவிக் காலத்தை நீட்டிக்க பிரதமர் மோடி RSSஐ திருப்திப் படுத்துவதாகவும் குற்றம் சாட்டினார்.
இதையும் படிங்க: மோடி சேவை கார்ப்பரேட்டுகளுக்கு மட்டுமே... எம்.பி சு.வெங்கடேசன் கடும் சாடல்