சீனாவின் தியான்ஜின் நகரில் நடந்த ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (SCO) உச்சி மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி ஒரு தரமான சம்பவத்தை அரங்கேற்றியிருக்கார்! பயங்கரவாதத்துக்கு எதிரா மோடி குரல் கொடுத்து, பாகிஸ்தானை மறைமுகமா மூக்கறுக்க வைச்சுட்டார்.
பஹல்காம் தாக்குதலை கண்டிச்சு SCO நாடுகள் ஒரு கூட்டு பிரகடனத்தை வெளியிட்டு, தாக்குதல் நடத்தியவங்க மற்றும் ஆதரவாளர்களை நீதியின் முன் நிறுத்தணும்னு வலியுறுத்தியிருக்கு. இது பாகிஸ்தானுக்கு பெரிய பின்னடைவு, ஏன்னா சீனாவின் முன்னிலையில் இந்த கண்டனம் வந்திருக்கு. மோடியின் இந்த ப்ளான் சூப்பர் சக்சஸ்!
SCO மாநாடு செப்டம்பர் 1, 2025-ல் தியான்ஜினில் தொடங்கியது. இந்தியா, சீனா, ரஷ்யா, பாகிஸ்தான் உள்ளிட்ட 10 உறுப்பு நாடுகள், 16 பார்வையாளர் நாடுகள், ஐ.நா., ஏசியான் தலைவர்கள் பங்கேற்றாங்க. மோடியை சீன அதிபர் ஷி ஜின்பிங் வரவேற்றார்.
இதையும் படிங்க: பயங்கரவாதம் மனிதகுலத்திற்கு சவால்!! சீனா முன்னிலையில் பாகிஸ்தானை பந்தாடிய மோடி! கொல மாஸ்!!
மோடி நேபாள பிரதமர் கே.பி. ஷர்மா ஓலி, மாலத்தீவு அதிபர் முகமது முய்சு, எகிப்து பிரதமர் முஸ்தபா மட்போலி, வியட்நாம் பிரதமர் பாம் மின் சின், மியான்மர் ராணுவத் தலைவர் மின் ஆங் ஹ்லெயிங், பெலாரஸ் அதிபர் அலெக்சாண்டர் லுகாஷெங்கோ, தஜிகிஸ்தான் அதிபர் எமோமாலி ரஹ்மான், கஜகஸ்தான் அதிபர் காசிம்-ஜோமார்ட் டோகாயேவ் ஆகியோரை சந்திச்சு பேசினார். ஆனா, மாநாட்டின் ஹைலைட் மோடியின் உரை தான்!
மோடி தனது உரையில் பயங்கரவாதத்துக்கு எதிரா கோபமா பேசினார்: "பயங்கரவாதம் மனிதகுலத்துக்கு சவால். இந்தியா 40 வருஷமா இதை எதிர்க்குது. பஹல்காம் தாக்குதலுக்கு ஆதரவு தந்த நட்பு நாடுகளுக்கு நன்றி. ஒரு நாடு வளரணும்னா பாதுகாப்பு, அமைதி, ஸ்திரத்தன்மை வேணும். ஆனா, பயங்கரவாதமும் பிரிவினைவாதமும் தடையா இருக்கு." இந்த உரை பாகிஸ்தானை மறைமுகமா தாக்கியது.
ஏன்னா பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆதரவு தருதுன்னு இந்தியா நீண்ட காலமா குற்றம்சாட்டுது. மோடி SCO-வை "எஸ்-பாதுகாப்பு, சி-இணைப்பு, ஓ-வாய்ப்பு"னு வர்ணிச்சு, இந்தியாவின் பங்களிப்பை எடுத்துரைத்தார். "அல் கொய்தா உள்ளிட்ட அமைப்புகளுக்கு எதிரா இந்தியா நடவடிக்கை எடுத்திருக்கு. பயங்கரவாதத்துக்கு எதிரா ஒற்றுமை வேணும்"னு வலியுறுத்தினார்.

இந்த உரையின் பலனா, SCO நாடுகள் பஹல்காம் தாக்குதலை கண்டிச்சு ஒரு கூட்டு பிரகடனத்தை வெளியிட்டாங்க. "தாக்குதல் நடத்தியவங்க, ஆதரவாளர்கள், நிதியுதவி செய்பவர்கள் நீதியின் முன் நிறுத்தப்படணும்"னு பிரகடனம் வலியுறுத்துது. இது பாகிஸ்தானுக்கு பெரிய அடி, ஏன்னா சீனாவின் முன்னிலையில் இந்த கண்டனம் வந்திருக்கு. பாகிஸ்தான் சீனாவின் நெருங்கிய நட்பு நாடு.
ஆனா இந்த மாநாட்டில் சீனா இந்தியாவின் நிலைப்பாட்டை ஆதரிச்சது மோடியின் டிப்லோமேடிக் வெற்றி. மோடி-ஜின்பிங் சந்திப்பில் எல்லை அமைதி, வர்த்தகம், விசா ஈசி, நேரடி பிளைட்கள் மீண்டும் தொடங்குதல் பேசப்பட்டது, இது இந்தியா-சீனா உறவுக்கு புது தொடக்கம். பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீப் இந்த மாநாட்டில் இருந்தாலும், மோடியின் உரையும் கூட்டு பிரகடனமும் அவங்களுக்கு பெரிய பின்னடைவு.
இந்த மாநாடு உலகளாவிய பயங்கரவாதத்துக்கு எதிரான ஒத்துழைப்புக்கு ஒரு தளம். ஆனா, இந்தியா-பாகிஸ்தான் மோதல், ரஷ்யா-உக்ரைன் போர், ஈரான் அணு திட்டம் ஆகியவை SCO-வுக்கு சவால்கள். மோடியின் உரை பாகிஸ்தானுக்கு மட்டுமில்ல, பயங்கரவாதத்துக்கு ஆதரவு தரும் எல்லா நாடுகளுக்கும் எச்சரிக்கை.
தியான்ஜின் டிக்ளரேஷனில் பயங்கரவாதத்துக்கு எதிரான ஒற்றுமை, பிராந்திய அமைதி, பொருளாதார ஒத்துழைப்பு வலியுறுத்தப்பட்டிருக்கு. மோடியின் இந்த மாஸ்டர் ஸ்ட்ரோக் இந்தியாவின் உலக அரங்கில் செல்வாக்கை உயர்த்தியிருக்கு. பாகிஸ்தான் மூக்கறுக்கப்பட்டு, சீனாவின் ஆதரவோடு இந்தியாவின் நிலைப்பாடு வலுவடைஞ்சிருக்கு. இது உலக அரசியலில் ஒரு திருப்புமுனை!
இதையும் படிங்க: பயங்கரவாதம் மனிதகுலத்திற்கு சவால்!! சீனா முன்னிலையில் பாகிஸ்தானை பந்தாடிய மோடி! கொல மாஸ்!!