கருத்து சுதந்திரம் என்பது ஒரு கட்சியின் ஆட்சியில் மட்டும் பாதுகாக்கப்பட வேண்டிய உரிமை அல்ல. அது எல்லா காலகட்டத்திலும், எல்லா ஆட்சிகளிலும் தொடர்ந்து காப்பாற்றப்பட வேண்டிய அடிப்படை மதிப்பு. இன்று இந்தக் குற்றச்சாட்டு பாஜக மீது அதிகம் எழுந்தாலும், நாளை வேறு எந்த ஆட்சி வந்தாலும் இதே கொள்கையைப் பின்பற்றினால் அதையும் கேள்வி கேட்க வேண்டியதுதான். ஏனெனில், கேள்வி கேட்கும் சுதந்திரம்தான் ஜனநாயகத்தின் உயிர்நாடி.
பாஜக ஆட்சியில் கருத்து சுதந்திரம் நெருக்கப்படுகிறது என்ற குற்றச்சாட்டு இந்திய அரசியலில் கடந்த சில ஆண்டுகளாகவே மிகவேகமாக பரவி வரும் ஒரு விவாதமாக இருக்கிறது. இது வெறும் எதிர்க்கட்சிகளின் பிரச்சாரம் மட்டுமல்ல. சர்வதேச அமைப்புகள், மனித உரிமை கண்காணிப்பாளர்கள், பத்திரிகையாளர்கள், எழுத்தாளர்கள் என பல தரப்பினரும் இதே கவலையை வெளிப்படுத்தி வருகிறார்கள்.
இந்த நிலையில் கருத்து சுதந்திரத்தின் கழுத்தை பாஜக நெறிப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் குற்றம் சாட்டியுள்ளார். எழுத்தையும், கலையையும் அதிகாரத்திற்கு முன் மண்டியிடவைக்கும் அப்பட்டமான முயற்சிகள் சாகித்ய அகாதமி மற்றும் திரைப்பட தணிக்கை வாரியத்தின் மூலம் தீவிரமாக நடந்தேறுகிறது என்ற கடும் குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்.
இதையும் படிங்க: மீண்டும் ரயில் கட்டண உயர்வு... பயணிகளை சாலைக்கு துரத்திய மோடி அரசு... MP சு. வெங்கடேசன் கண்டனம்...!
சாகித்திய அகாடமி விருது விவகாரத்தில் சமீபத்தில் குற்றச்சாட்டை முன் வைத்திருந்த நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் தற்போது தணிக்கை வாரியத்தின் மீதும் கடும் குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார். பா.ஜ.க.வின் தீய நோக்கங்களுக்காக கருத்து சுதந்திரத்தின் கழுத்து நெரிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது என்று கூறினார். கலைவெளிப்பாட்டு உரிமையை காவுகேட்கும் பாசிச முயற்சிகளை எதன் பொருட்டும் அனுமதிக்க முடியாது எனவும் கண்டனம் தெரிவித்தார்.
இதையும் படிங்க: பார்த்து பேசுங்கய்யா..! யார் எழுதி கொடுத்தாலும் அப்டியே பேசுவீங்களா முதல்வரே? கிண்டலடித்த அண்ணாமலை...!