தமிழ்நாட்டின் கிராமங்களிலும் நகரங்களிலும், இந்து சமயத்தின் ஆழமான பக்தி உணர்வுகளை வெளிப்படுத்தும் ஒரு அற்புதமான சடங்காக தீ மிதித்தல் அறியப்படுகிறது. இது வெறும் உடல் சோதனையல்ல., மனதின் உறுதி, ஆன்மாவின் சுத்தம் மற்றும் தெய்வத்துக்கான அளவில்லா அன்பின் சின்னம். குறிப்பாக அம்மன் கோவில்களின் திருவிழாக்களின் போது, ஆயிரக்கணக்கான பக்தர்கள் தங்கள் நேர்த்திக் கடன்களை செலுத்துவதற்காக எரிந்த கருக்களின் பாதையில் கால்களை வைத்து நடப்பது, மனதில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது
பொதுவாக, அம்மன் கோவில்களின் பூச்சொரி அல்லது கோவுர உற்சவங்களின் போது இது நடக்கும். பக்தர்கள் முன்கூட்டியே விரதம் இருந்து, உணவு கட்டுப்பாடுகளைப் பின்பற்றி, மனதை சுத்தம் செய்துகொள்கின்றனர். விழா நாளன்று, காலைப் பொழுது அபிஷேகங்கள், அலங்காரங்கள் நடைபெறும். பின்னர், கோவிலைச் சுற்றி வீதி உலா வரும். மாலை நேரத்தில், தீமிதி திருவிழா நடைபெறும்.

பக்தர்கள் மாலை அணிந்து, பூக்களால் அலங்கரித்து, தங்கள் வாக்களை நினைத்து, தீயின் மீது நடக்கின்றனர். சிலர் கூட்டு முழக்குகள், தாள வாசனைகளுடன் இதைச் செய்கின்றனர். இந்த நிலையில், நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி அடுத்த வடக்குப்பொய்கைநல்லூரில் தீமிதி திருவிழா நடைபெற்றது. இந்த தீமிதி திருவிழாவில் தீமிதிக்க தயங்கி நின்ற பெண்ணை முதியவர் ஒருவர் தூக்கிச் செல்லும்போது இருவரும் தீக்குழியில் விழுந்து படுகாயம் அடைந்தனர்.
இதையும் படிங்க: நம்மள பாத்தாலே நடுங்குறாங்க... நம்ம ஆட்டம் தான் இனி! விஜய் அறைகூவல்..!!
உடனடியாக அருகில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு நாகப்பட்டினம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதனால் பதற்றமான சூழல் ஏற்பட்டது.
இதையும் படிங்க: சுற்றுப்பயணத்திற்கு சூறாவளியாய் புறப்பட்ட விஜய்... நாகையில் என்ன பேசப்போகிறார் தெரியுமா??