மகாராஷ்டிராவின் நாக்பூரில் திங்கள்கிழமை வெடித்த வன்முறையின் மூளையாக செயல்பட்டவர் பஹீம் கான் என்று போலீசார் கூறுகின்றனர். அவர் மக்களைத் தூண்டிவிட்டு, காவல் நிலையம் முன் சுமார் 500 பேரைக் கூட்டினார்.

நாக்பூரில் உள்ள கணேஷ்பேத் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட இரண்டாவது முதல் தகவல் அறிக்கையில் இது தெரியவந்துள்ளது. எஃப்.ஐ.ஆரின் படி, கும்பல் இருட்டைப் பயன்படுத்தி பெண் காவல்துறையினரைத் துன்புறுத்த முயன்றது. காந்தி கேட் அருகே சத்ரபதி சிவாஜி மகாராஜின் உருவ பொம்மைக்கு முன்னால் விஸ்வ இந்து பரிஷத், பஜ்ரங் தள் அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஔரங்கசீப்பின் கல்லறைக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். ஔரங்கசீப்பின் அடையாள உருவ பொம்மையை எரித்தனர்.
இதையும் படிங்க: அவுரங்கசீப் சமாதியை அகற்றுவதுதான் இப்போ முக்கியமா..? பாஜக, இந்துத்துவ அமைப்புகளை விளாசிய வேல்முருகன்.!!

இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், சிறுபான்மை ஜனநாயகக் கட்சியின் நகரத் தலைவர் ஃபஹீம் கான் தலைமையில் ஒரு கூட்டம் காவல் நிலையத்தில் திரண்டது. அப்பகுதியில் பீதியை ஏற்படுத்தவும், மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தவும், மத விரோதத்தைத் தூண்டும் நோக்கத்துடன் சமூக நல்லிணக்கத்தைக் குலைக்கவும், கோடாரிகள், கற்கள், தடிகள் உள்ளிட்ட பிற ஆபத்தான ஆயுதங்களை அந்தக் கும்பல் ஏந்தியிருந்தனர்.

பல்தார்புரா சௌக் பகுதியில் கொலை செய்யும் நோக்கத்துடன், கும்பலைச் சேர்ந்த உறுப்பினர்கள் காவல்துறையினரை பயங்கர ஆயுதங்கள், கற்களால் தாக்கினர்.போலீசாஎய்ன் உத்தியோகப்பூர்வ கடமைகளைச் செய்வதை தடுக்க பெட்ரோல் குண்டுகளைத் தயாரித்து, அவர்கள் மீது வீசினர். அவர்களில் சிலர் இருட்டைப் பயன்படுத்திக் கொண்டு, ஆர்.சி.பி. படையைச் சேர்ந்த ஒரு பெண் கான்ஸ்டபிளின் சீருடையையும், உடலையும் தொட்டனர். அவர்கள் மற்ற பெண்களையும் பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்து துன்புறுத்தினர். சில பெண் ஊழியர்களைப் பார்த்து, அவர்கள் ஆபாசமான சைகைகளையும், ஆபாசமான கருத்துக்களையும் தெரிவித்தனர்'' எனக் கூறப்பட்டுள்ளது.

மஹாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில், மார்ச் 17 மாலை ஒரு பிரிவினர் தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி போராட்டம் அறிவித்தனர். இதனால் அங்கு பதற்றம் தொற்றிக் கொண்டது. மாலை நேரத்தில், ஒரு பிரிவினர் மத நிந்தனை செய்து விட்டதாக வதந்திகள் பரவின. இதைத்தொடர்ந்து வன்முறை வெடித்தது. ஒரு பிரிவினர் வாகனங்களை தீவைத்து எரிக்க தொடங்கினர். இதனால் நகரம் முழுவதும் பெரும் பரபரப்பும் பீதியும் நிலவியது.
இதையும் படிங்க: வானிலை மையம் வெளியிட்ட கூல் நியூஸ்.. தமிழகத்தில் இன்று முதல் வருகின்ற 24-ஆம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு..