பீகாரின் அரசியல் வரலாற்றில் 2025 சட்டமன்றத் தேர்தல் ஒரு முக்கியத்துவமான திருப்புமுனையாக அமைந்தது. நவம்பர் 6 மற்றும் 11 ஆம் தேதிகளில் நடைபெற்ற இந்தத் தேர்தலில், 243 தொகுதிகளுக்கான வாக்குகள் நவம்பர் 14 அன்று எண்ணப்பட்டன. தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி மாபெரும் வெற்றி பெற்றது. பெரும்பான்மையின் நிரூபித்து பாஜக பல்வேறு இடங்களில் வெற்றியடைந்தது. காங்கிரஸ் கட்சி தோல்வி முகத்தை கண்டது. இதேபோல் பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சி படுதோல்வி அடைந்தது.
இந்த நிலையில் தேர்தலில் படுதோல்வி அடைந்த நிலையில் ஜன் சுராஜ் கட்சியின் தேசிய தலைவர் உதய் சிங் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, சட்டமன்றத் தேர்தல் முடிவுகளால் ஏமாற்றமடைந்துள்ளதாகவும் ஆனால் சோர்வடையவில்லை என்றும் தெரிவித்தார். ஒரு இடத்தைக் கூட தங்களால் வெல்ல முடியவில்லை என்றாலும் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணியை தொடர்ந்து எதிர்ப்போம் என்று தெரிவித்தார்.

ராசி ஜனதா தளம் மீண்டும் வெற்றி பெறுவதை விரும்பவில்லை என்பதை இந்த தீர்ப்பு நிரூபிக்கிறது என்றும் பீகாரில் ஆளும் என் டி ஏ அரசாங்கத்தால் பெண்கள் கணக்குகளுக்கு 40 ஆயிரம் கோடி ரூபாய் பணப்பரிமாற்றம் செய்யப்பட்டதாகவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: மக்கள் முடிவை ஏற்கிறோம்... ஆனால்..! காங்கிரஸ் கட்சி கொடுத்த நம்பிக்கை...!
இதுதான் அவர்கள் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தது என்றும் பீகாரில் உள்ள ஒவ்வொரு பெண்களுடைய வங்கி கணக்கிலும் தொழில் தொடங்கும் வகையில் தலா பத்தாயிரம் டெபாசிட் செய்யப்பட்டதாகவும் தெரிவித்தார். தேர்தல் நன்னடத்தை விதி அமல்படுத்தப்பட்ட பின்னரும் இந்த பணம் டெபாசிட் செய்யப்பட்டதாக குற்றம் சாட்டினார்.
இதையும் படிங்க: பீகார் முதமைச்சர் யார்? - நீடிக்கும் மர்மம்... போட்ட உடனேயே டெலிட் ஆன ட்வீட்டால் பரபரப்பு ...!