நெல்லையில் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த கவின் என்பவரும், ஆதிக்கச் சாதியைச் சேர்ந்தவரும், இவ்வழக்கின் முக்கியக் குற்றவாளியுமான சுர்ஜித்தின் சகோதரியும் காதலித்தனர். இதனை சுர்ஜித்தின் குடும்பத்தினர் ஏற்க மறுத்ததால், அது ஆணவக் கொலையாக மாறியது. கவின் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் சுர்ஜித் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவரது பெற்றோர் காவல் துறையிலிருந்து பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்த ஆர்வ படுகொலை சம்பவம் தமிழ்நாட்டையே இலக்கிய நிலையில், நெல்லையில் மீண்டும் ஒரு பயங்கரம் அரங்கேறி உள்ளது.
நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே மறுகால்குறிச்சியில் காதல் விவகாரத்தில் கல்லூரி மாணவனுக்கு அரிவாள் வெட்டப்பட்ட சம்பவம் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. உயிருக்கு ஆபத்தான நிலையில் நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், நாங்குநேரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். காதல் விவகாரத்தில் பெண்ணின் அண்ணன் உள்ளிட்ட நான்கு பேர் சேர்ந்து மாணவனை அரிவாளால் வெட்டியதாக தகவல்.
நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகேயுள்ள மறுகால்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த மாணவன் நாங்குநேரி அருகேயுள்ள வாகைகுளம் தனியார் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வருகிறார். அந்த மாணவன், அதே கிராமத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவரை காதலித்து வந்தாக கூறப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வரும் பெண்ணின் சகோதரன் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளார்.
இதையும் படிங்க: ஏன் விட்டு வெச்சு இருக்கீங்க?.. கவின் கொலை குற்றவாளி சுர்ஜித்தின் தாய்க்கு பிடிவாரண்ட்... கோர்ட் அதிரடி உத்தரவு...!
இதனை மீறி அந்த மாணவன் காதலை கைவிட மறுத்து வந்ததால் அந்தப் பெண்ணின் சகோதரன் உட்பட நான்கு பேர் நாங்குநேரியில் இருந்து வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்த மாணவனை ஊருக்கு வெளியே வழிமறித்து அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் வெட்டியதாக தெரிகிறது.
இதில் படுகாயம் அடைந்த மாணவனை அருகில் இருந்தவர்கள் மீட்டு திருநெல்வேலியில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு மாணவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. சம்பவம் தொடர்பாக நாங்குநேரி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: நெல்லை திமுக கோட்டையா இருக்கணும்! நிர்வாகிகளுக்கு கறார் காட்டிய முதல்வர்...!