இந்திய பார்லிமென்ட்டோட மழைக்கால கூட்டத்தொடரில் இன்று (ஜூலை 28, 2025) லோக்சபாவில் ‘ஆபரேஷன் சிந்தூர்’ பற்றி ஒரு பெரிய விவாதம் நடந்துச்சு. இந்த விவாதத்தை பாதுகாப்புதுறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தொடங்கி வெச்சு, இந்திய ராணுவத்தோட வீரத்தையும், ஆபரேஷன் சிந்தூரோட முக்கியத்துவத்தையும் பற்றி விரிவா பேசினார். அவரோட பேச்சு இந்தியாவோட தேசிய பாதுகாப்பு, பயங்கரவாதத்துக்கு எதிரான நிலைப்பாடு ஆகியவற்றை தெளிவா எடுத்து வெச்சது.
ராஜ்நாத் சிங் முதல்ல பஹல்காம் தாக்குதல்ல உயிரிழந்த 26 பேருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவிச்சு ஆரம்பிச்சார். “மே 6, 7 தேதிகள்ல இந்திய ராணுவம் ஒரு வரலாற்று சிறப்புமிக்க நடவடிக்கையை ஆரம்பிச்சது. இது இந்திய வீரர்களோட வலிமையையும், துல்லியமான திட்டமிடுதலையும் உலகத்துக்கு காட்டுச்சு”ன்னு பெருமையா சொன்னார்.

பஹல்காம் தாக்குதல், பாகிஸ்தானோட ஆதரவோட நடந்த ஒரு கொடூரமான பயங்கரவாத தாக்குதல். இதுக்கு பதிலடியா, இந்தியா ‘ஆபரேஷன் சிந்தூர்’ மூலமா பாகிஸ்தான்லயும், பாகிஸ்தான் ஆக்ரமிப்பு காஷ்மீர்லயும் (PoK) இருக்குற பயங்கரவாத முகாம்களை துல்லியமா தாக்கி அழிச்சது.
இதையும் படிங்க: இந்தியா வர காத்திருக்கும் அமெரிக்க போர் ட்ரோன்கள்!! குறி வச்சா இரை தப்பாது! அவ்வளவு தொழில்நுட்பம்!!
இந்த நடவடிக்கையில இந்திய ராணுவம் பிரம்மோஸ் ஏவுகணைகள், இஸ்ரேலிய ஹாரப் ட்ரோன்கள், உள்நாட்டு ஆகாஷ், எஸ்-400 மாதிரியான பாதுகாப்பு அமைப்புகளை பயன்படுத்தி, 100-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகளை ஒழிச்சு, பாகிஸ்தானோட ராணுவ உள்கட்டமைப்புக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது.
ராஜ்நாத் சிங், “இந்த ஆபரேஷனோட நோக்கம் எல்லைய தாண்டி பாகிஸ்தானை ஆக்ரமிக்குறது இல்லை, இந்திய மக்களுக்கு தீங்கு விளைவிக்குற பயங்கரவாத முகாம்களை அழிக்குறது மட்டுமே. இதுல நாம முழு வெற்றி அடைஞ்சோம்”ன்னு சொன்னார்.
பாகிஸ்தான் மே 10-ல் இந்திய இலக்குகளை தாக்க முயற்சி செஞ்சப்ப, நம்மோட எஸ்-400 பாதுகாப்பு அமைப்புகள் அதை முறியடிச்சு, ஒரு இலக்கையும் பாகிஸ்தானால தாக்க முடியல. “நம்மோட ஒரு விமானம் கூட பாகிஸ்தானால தாக்கப்படல, ஆனா எதிர்க்கட்சிகள் இதைப் பத்தி பேசாம, நம்மோட விமானங்கள் எத்தனை இழந்தோம்னு கேள்வி கேக்குறாங்க. இது தேசிய உணர்வுக்கு உகந்ததில்லை”ன்னு எதிர்க்கட்சிகளை கடுமையா விமர்சிச்சார்.
மேலும் அவர், “ஆபரேஷன் சிந்தூர் ஒரு திட்டமிட்ட, கவனமான, இரக்கமுள்ள நடவடிக்கை. பொதுமக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லாம, பயங்கரவாத முகாம்கள் மட்டுமே குறிவெச்சு அழிக்கப்பட்டது. இதுக்கு எந்த வெளிநாட்டு அழுத்தமும் இல்லை. பாகிஸ்தானோட ராணுவ இயக்குநரே (DGMO) போர் நிறுத்தத்துக்கு பேச்சுவார்த்தை கேட்டப்ப, நாம ஒரு புரிந்துணர்வுக்கு வந்தோம்.

ஆனா, இனி எந்த பயங்கரவாத முயற்சியோ, தவறான நடவடிக்கையோ பாகிஸ்தான் செஞ்சாலும், இந்தியா மறுபடியும் தாக்க தயங்காது”ன்னு எச்சரிக்கையோட சொன்னார்.
இந்த ஆபரேஷனை பிரதமர் மோடியோட தலைமையில இந்திய ராணுவம் சிறப்பா செயல்படுத்தியதா பாராட்டினார். எதிர்க்கட்சிகளோட கேள்விகளுக்கு பதிலளிக்கையில, “நீங்க இந்த ஆபரேஷனோட வெற்றியை கேளுங்க, அது முழு வெற்றிதான். பாகிஸ்தானோட பயங்கரவாத முயற்சிகளுக்கு இது ஒரு பொருத்தமான பதிலடி. இதை ஒரு தேர்வு மாதிரி பாருங்க, முடிவுதான் முக்கியம், பேனா உடைஞ்சுதா, பென்சில் இழந்தோமான்னு கேக்குறது தேவையில்லை”.
இந்த ஆபரேஷன் யுத்த நோக்கத்துடன் நடத்தப்படல. பயங்கரவாதிகளுக்கும் அதை ஆதரிக்கிறவங்களுக்கும் புத்தி புகுத்தவே நடந்துச்சு. இப்போதும் அடிச்சு சொல்லுறேன். ஆபரேஷன் சிந்துார் தற்காலிக நிறுத்தம் மட்டுமே. பாகிஸ்தான் மீண்டும் வாலாட்டினால் ஆபரேஷன் சிந்துார் மீண்டும் தொடரும்னும் ராஜ்நாத் சிங் சொன்னார்.
இதையும் படிங்க: அதிகபட்சம் நவம்பர்தான் டைம்!! வரப்போகுது பெரிய ஆஃபர்.. இந்தியா - அமெரிக்கா ஒப்பந்தத்தில் முன்னேற்றம்..!