இந்திய துணை ஜனாதிபதியும் மாநிலங்களவை தலைவருமான ஜகதீப் தன்கர், ஜூலை 21, 2025 அன்று தனது பதவியை திடீரென ராஜினாமா செய்து, ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு கடிதம் அனுப்பியிருக்கார். உடல் நலக் காரணங்களை காரணமாக கூறியிருந்தாலும், மத்திய அரசுடனான கருத்து வேறுபாடுகளே இதற்கு முக்கிய காரணம்னு அரசியல் வட்டாரங்களில் பேசப்படுது.
தன்கர் தனது ராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு அனுப்பியிருக்கார். இந்திய அரசியலமைப்பு பிரிவு 67(b)-ன்படி, துணை ஜனாதிபதி தனது ராஜினாமாவை ஜனாதிபதிக்கு எழுத்து மூலமா சமர்ப்பிக்கணும். ஜனாதிபதி இந்த கடிதத்தை ஏற்றுக்கொண்டு, உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்புவார்.
உள்துறை அமைச்சகம் இதை அரசிதழில் (Gazette) வெளியிடுது. ஜூலை 22-ல் தன்கரின் ராஜினாமா ஏற்கப்பட்டதாக உள்துறை அமைச்சகம் அறிவிச்சிருக்கு. இதன்பிறகு, பதவி காலியாக இருப்பதாக உறுதி செய்யப்பட்டு, புதிய துணை ஜனாதிபதி தேர்தலுக்கு ஏற்பாடு செய்யப்படும்.
இதையும் படிங்க: துணை ஜனாதிபதி விவகாரம்.. பரபரக்கும் டெல்லி.. மோடியுடன் அமித் ஷா முக்கிய ஆலோசனை..
ஜனாதிபதி திரவுபதி முர்மு, ராஜினாமாவை ஏற்றுக்கொண்டு, தேர்தல் ஆணையத்துக்கு தேர்தல் நடத்த உத்தரவிடுவார். இந்திய அரசியலமைப்பு பிரிவு 68(2)-ன்படி, பதவி காலியான 60 நாட்களுக்குள் புதிய துணை ஜனாதிபதியை தேர்ந்தெடுக்கணும். இந்த நடவடிக்கைகளை ஒருங்கிணைக்க ஜனாதிபதி முக்கிய பங்கு வகிக்கிறார். இப்போதைக்கு, மாநிலங்களவை துணைத் தலைவர் ஹரிவன்ஷ், மாநிலங்களவையை வழிநடத்துவார்.

துணை ஜனாதிபதி தேர்தல், இந்திய அரசியலமைப்பு பிரிவு 66 மற்றும் குடியரசு துணைத் தலைவர் தேர்தல் விதிகள் 1974-ன்படி நடக்கும். மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் மட்டுமே வாக்காளர்களாக இருப்பாங்க. இது விகிதாசார பிரதிநிதித்துவ முறையில் (Single Transferable Vote) மறைமுக தேர்தலாக நடைபெறும்.
வேட்பாளர் இந்திய குடிமகனாகவும், 35 வயதுக்கு மேல் உள்ளவராகவும், மாநிலங்களவை உறுப்பினராக தகுதி பெற்றவராகவும் இருக்கணும். வேட்பு மனுவை குறைந்தபட்சம் 20 வாக்காளர்கள் முன்மொழியணும், 20 பேர் வழிமொழியணும். தேர்தல் ஆணையம் இந்த செயல்முறையை நடத்தும்.
தேர்தல் எப்போது? தன்கரின் ராஜினாமாவுக்கு பிறகு, தேர்தல் ஆணையம் ஒரு மாதத்துக்குள், அதாவது ஆகஸ்ட் இறுதிக்குள் தேர்தலை நடத்த திட்டமிட்டிருக்கு. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஆகஸ்ட் 21 வரை நடக்குது. இந்த கூட்டத்தொடரிலேயே தேர்தல் நடத்தப்படலாம்னு தகவல்கள் வெளியாகியிருக்கு.

ஜூலை 23-ல் தேர்தல் ஆணையம் தேர்தல் பணிகளை தொடங்கியிருக்கு, ஒரு இரண்டு நாட்களில் தேர்தல் அறிவிப்பு வெளியாகலாம். சுதந்திர தினத்துக்கு (ஆகஸ்ட் 15) முன்னாடி புதிய துணை ஜனாதிபதி தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்பிருக்கு.
இந்த தேர்தல், NDA-வுக்கு ஒரு முக்கிய சவாலாக இருக்கும். NDA-வுக்கு மக்களவையில் 292 உறுப்பினர்களும், மாநிலங்களவையில் 120-க்கும் மேற்பட்ட உறுப்பினர்களும் இருக்காங்க. இதனால, பாஜகவோட வேட்பாளர் வெற்றி பெற வாய்ப்பு அதிகம். ஆனா, எதிர்க்கட்சிகளும் I.N.D.I.A கூட்டணி வேட்பாளரை நிறுத்தலாம், இது அரசியல் பதற்றத்தை அதிகரிக்கலாம்னு நிபுணர்கள் தெரிவிச்சிருக்காங்க.
இதையும் படிங்க: தன்கர் ஏன் திடீர்னு ராஜினாமா பண்ணாரு? மறைக்காம சொல்லுங்க.. மத்திய அரசை கேள்வி கேட்கும் கார்கே!