கேரளாவைச் சேர்ந்த நர்ஸ் நிமிஷா பிரியா, ஏமனில் மரண தண்டனை எதிர்கொண்டிருக்கும் விவகாரம் உலக அளவில் பேசப்படுற ஒரு முக்கியமான விஷயம். 2017-ல் ஏமன் நாட்டைச் சேர்ந்த தலால் அப்தோ மஹ்தி என்பவரைக் கொலை செய்ததாகக் குற்றம்சாட்டப்பட்டு, ஏமன் உச்ச நீதிமன்றம் 2020-ல் நிமிஷாவுக்கு மரண தண்டனை விதிச்சது.
இந்த வழக்கு, இந்திய அரசு, நிமிஷாவோட குடும்பம், மற்றும் பல அமைப்புகளின் கவனத்தை ஈர்த்திருக்கு. ஜூலை 14, 2025-ல், இந்திய உச்ச நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, அட்டர்னி ஜெனரல் ஆர். வெங்கட்ரமணி, “அரசு முடிந்த அளவு எல்லா முயற்சிகளையும் செய்யுது”னு தெரிவிச்சார். ஆனா, ஏமனோட சிக்கலான அரசியல் நிலைமையால இந்த முயற்சிகள் பெரிய அளவில் பலன் தரலனு நீதிமன்றத்தில் சொல்லப்பட்டது.
நிமிஷா பிரியா, பாலக்காட்டைச் சேர்ந்த 38 வயசு செவிலியர். 2008-ல் ஏமனுக்கு வேலைக்காகப் போனவர், 2011-ல் டோமி தாமஸை கல்யாணம் பண்ணிக்கிட்டு, ஒரு மகளையும் பெத்தார். 2014-ல் உள்நாட்டுப் போர் காரணமா அவரோட கணவர், மகள் இந்தியா திரும்பினாங்க. ஆனா, நிமிஷா ஏமனில் தங்கி, தலால் மஹ்தியோட இணைந்து ஒரு கிளினிக் ஆரம்பிச்சார்.
இதையும் படிங்க: நிமிஷா வழக்குல எதுவும் பண்ண முடியல!! கைவிரித்த மத்திய அரசு!! கலக்கத்தில் கேரளா நர்ஸ் குடும்பம்!
இந்த கூட்டாண்மையில் பிரச்சினைகள் வந்து, மஹ்தி நிமிஷாவோட பாஸ்போர்ட்டை எடுத்து வச்சு, அவரை துன்புறுத்தியதா குற்றச்சாட்டு இருக்கு. 2017-ல், மயக்க மருந்து ஓவர்டோஸ் ஆனதால் மஹ்தி இறந்ததாக நிமிஷா சொன்னாலும், அவருக்கு கொலை குற்றச்சாட்டு வந்து, சனா மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்திய அரசு, நிமிஷாவை காப்பாற்ற பல முயற்சிகளை எடுத்து வருது. ஏமன் சட்டப்படி, “ரத்தப் பணம்” (Blood Money) கொடுத்து, பாதிக்கப்பட்டவரின் குடும்பத்திடம் மன்னிப்பு கேட்டா தண்டனையை தள்ளுபடி செய்யலாம். இதுக்காக, நிமிஷாவோட குடும்பம் 8.6 முதல் 11 கோடி ரூபாய் வரை நஷ்டஈடு கொடுக்க முன்வந்திருக்கு.
ஆனா, மஹ்தியோட குடும்பம் இதுவரை இதை ஏற்கலை. இந்திய வெளியுறவு அமைச்சகம், ஏமன் அதிகாரிகளோட தொடர்பில் இருந்து, பேச்சுவார்த்தைகளை நடத்தி வருது. ஆனா, ஏமனில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் இருக்குறதால, இந்தியாவுக்கு அங்கு தூதரக உறவு இல்லை, இது முயற்சிகளை கடினமாக்குது.
ஜூலை 10, 2025-ல், ‘சேவ் நிமிஷா பிரியா இன்டர்நேஷனல் ஆக்ஷன் கவுன்சில்’ உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செஞ்சு, இந்திய அரசு தூதரக நடவடிக்கைகள் மூலமா நிமிஷாவை மீட்க உத்தரவிடணும்னு கேட்டது. நீதிபதிகள் சுதன்ஷு துலியா மற்றும் ஜாய்மல்யா பாக்சி, இந்த வழக்கை ஜூலை 11-க்கு பட்டியலிட்டு, அரசின் முயற்சிகள் பற்றி விளக்கம் கேட்டாங்க.
ஜூலை 14-ல், அட்டர்னி ஜெனரல், “ஏமனில் நிலைமை மிகவும் சென்சிடிவ், தூதரக உறவு இல்லாததால் பெரிய அளவில் எதுவும் செய்ய முடியல”னு கூறினார். இது நீதிபதிகளுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தினாலும், அவங்க வழக்கை ஜூலை 18-க்கு ஒத்திவச்சாங்க.
இந்த நிலையில தான் இந்நிலையில், இன்று (ஜூலை 18) சுப்ரீம் கோர்ட்டில் நிமிஷா பிரியாவின் மரண தண்டனையை நிறுத்த கோரி தொடரப்பட்ட வழக்கு, நீதிபதிகள் விக்ரம் நாத் மற்றும் சந்தீப் மேத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் வெங்கடரமணி கூறியதாவது:
ஏமனில் சிக்கலான சூழ்நிலையை கருத்தில் கொண்டு, ராஜதந்திர ரீதியாக இந்திய அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர், என்றார். இதையடுத்து, ''ஏமனில் கேரள நர்ஸ் நிமிஷா பிரியாவை மரண தண்டனையில் இருந்து காப்பாற்ற அரசு முடிந்த அனைத்தையும் செய்கிறது'' என நீதிபதிகள் தெரிவித்தனர். வழக்கின் விசாரணையை ஆகஸ்ட் 14ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.
இதையும் படிங்க: கேரள நர்ஸுக்கு ஜூலை 16ல் தூக்கு!! கறார் காட்டும் ஏமன் அரசு.. அழுது புலம்பும் இந்திய குடும்பம்!!