தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் தனியார் கல்லூரி வளாகத்தில் தீப்பெட்டி தொழில் நூற்றாண்டு விழா தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சார்பில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டார். நிகழ்ச்சியில்
பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு,சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன்,கலந்து கொண்டனர்.
முன்னதாக அரங்கத்தில் தீப்பெட்டி உற்பத்தி செயல் முறை விளக்கக் கண்காட்சி அமைக்கப்பட்டு இருந்தது இதனை பார்வையிட்டார். பின்னர் நிகழ்வில் ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசுகையில் : தென் மாவட்ட மக்களுக்கு உதவி என பிரதமரிடம் கேட்டால் அது நம் கடமை முதற்கண் அதை செய்யுங்கள் என்பார் பிரதமர் எனக்கூறினார்.
தூத்துக்குடிக்கு மத்திய அரசு பல்வேறு திட்டங்களை கொண்டு வந்துள்ளது. தீப்பெட்டி தொழிலின் அச்சாணிகள் பெண்கள விளங்குகின்றனர். 2026 சட்டமன்ற தேர்தலில் மக்களின் பிரச்சனைகளை, பாதிப்புகள், கோரிக்கைகள் தெரிந்த நபரை சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுங்கள் என அறிவுறுத்தினார்.
இதையும் படிங்க: #BREAKING: ஆமாம்... இதற்கு தான் அமித் ஷாவை சந்தித்தேன்! செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி
2047 க்குள் பட்டாசு மற்றும் தீப்பெட்டி தொழிலை முன்னெற்றம் அடைய தொலை நோக்கு சிந்தனையுடன் செய்ய திட்டமுடுங்கள். செய்வதற்கு பிரதமர் தயாராக இருக்கிறார். பொருட்கள் 10% வரை ஜிஎஸ்டி குற்றைத்துள்ளோம். வரும் 22 ம் தேதி முதல் நீங்கள் அதை அனுபவிப்பீர்கள். பிரதமரின் தீபாவளி பரிசாக அது இருக்கும் என்றார்
இதையும் படிங்க: இந்தியாவில் ஒரே நாடு ஒரே வரி! நிர்மலா சீதாராமன் கொடுத்த புதிய அப்டேட்...