இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவும், அமெரிக்காவின் நாசாவும் இணைந்து உருவாக்கிய முதல் செயற்கைக்கோள் நிசார் (NASA-ISRO Synthetic Aperture Radar) நாளை (ஜூலை 30, 2025) மாலை 5:40 மணிக்கு ஆந்திராவின் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்திலிருந்து விண்ணில் ஏவப்படப் போகுது.
இந்த வரலாற்று சிறப்பு மிக்க ஏவுதலை இஸ்ரோவின் ஜி.எஸ்.எல்.வி-எப்16 ராக்கெட் மூலமா செய்யப் போறாங்க. இந்த ராக்கெட், 420.50 டன் எடையை சுமந்து, நிசார் செயற்கைக்கோளை 743 கிமீ உயரத்தில் சூரிய ஒத்திசைவு சுற்றுப்பாதையில் (Sun-Synchronous Orbit) நிலைநிறுத்தப் போகுது. இதற்காக 28 மணி நேர கவுண்ட்டவுன் இன்று (ஜூலை 29) பகல் 1:40 மணிக்கு தொடங்குது. இந்த ஏவுதலால், பழவேற்காடு மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு போக வேண்டாம்னு எச்சரிக்கப்பட்டிருக்காங்க.

நிசார் செயற்கைக்கோள், பூமியை 12 நாட்களுக்கு ஒரு முறை அங்குலம் அங்குலமா ஸ்கேன் பண்ணி, உயர் தெளிவு தரவுகளை கட்டுப்பாட்டு மையத்துக்கு அனுப்பப் போகுது. இது, நாசாவின் எல்-பேண்ட் மற்றும் இஸ்ரோவின் எஸ்-பேண்ட் ஆகிய இரட்டை அதிர்வெண் ரேடார் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, முதல் முறையாக SweepSAR தொழில்நுட்பத்தோடு 242 கிமீ அகலத்தில் பூமியை கண்காணிக்கும்.
இதையும் படிங்க: விட்ரா வண்டிய Earth-க்கு!! டிராகன் விண்கலத்தில் பூமியை நோக்கி புறப்பட்டார் சுபான்ஷு சுக்லா!
இதனால, பூமியின் மேற்பரப்பில் ஏற்படும் சிறு மாற்றங்கள், பனிப்பாறைகள் நகர்வு, தாவர வளர்ச்சி, மண்ணின் ஈரப்பதம், கடல் மட்ட உயர்வு, புயல் கண்காணிப்பு, பேரிடர் மேலாண்மை ஆகியவற்றை துல்லியமா பதிவு செய்ய முடியும்.
இந்த செயற்கைக்கோள் 2,392 கிலோ எடையுடன், இஸ்ரோவின் மாற்றியமைக்கப்பட்ட I3K சேட்டிலைட் பஸ்ஸை அடிப்படையா கொண்டு, நாசாவின் 12 மீட்டர் விரிந்து கொள்ளக்கூடிய மெஷ் ஆன்டெனாவைப் பயன்படுத்துது.
இஸ்ரோ தலைவர் வி.நாராயணன், “நிசார் ஒரு தனித்துவமான பூமி கண்காணிப்பு செயற்கைக்கோள். இது இந்தியா-அமெரிக்க விண்வெளி ஒத்துழைப்பில் ஒரு மைல்கல்லா இருக்கும். இதன் தரவுகள் பேரிடர் மேலாண்மை, விவசாயம், காலநிலை கண்காணிப்புல உலக அளவில் பயன்படும்”னு கூறியிருக்கார். மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங், “இந்த ஏவுதல் இந்தியாவின் விண்வெளி தொழில்நுட்பத்தில் ஒரு பெரிய முன்னேற்றம்.

இது பிரதமர் மோடியோட ‘விஷ்வ பந்து’ பார்வையை உணர்த்துது”னு பெருமையா சொல்லியிருக்கார். இந்த ஏவுதல், இஸ்ரோவின் 100வது ஏவுதலுக்கு பிறகு நடக்கும் முக்கியமான முயற்சி.இந்த திட்டத்துக்கு 1.5 பில்லியன் டாலர் செலவு செய்யப்பட்டிருக்கு. இதன் தரவுகள் 1-2 நாட்களுக்குள் பொதுவெளியில் வெளியிடப்படும், பேரிடர் நேரங்களில் உடனடியா கிடைக்கும்.
இந்த ஏவுதலை இஸ்ரோவின் யூடியூப் சேனல் மூலமா நேரலையில் பார்க்கலாம். இந்தியாவும் அமெரிக்காவும் இணைந்து உருவாக்கிய இந்த திட்டம், உலக அளவில் காலநிலை மற்றும் பேரிடர் மேலாண்மையில் புது புரட்சியை ஏற்படுத்தும்-னு எதிர்பார்க்கப்படுது.
இதையும் படிங்க: இன்று பூமி திரும்புகிறார் சுபான்ஷு சுக்லா.. கொண்டாட காத்திருக்கும் நாசா.. பெருமிதத்தில் இந்தியா!!