நேஷனல் ஹெரால்டு வழக்கில், 661 கோடி ரூபாய் மதிப்பிலான சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தியின் சொத்துகள் அமலாக்கத்துறை வசம் செல்ல உள்ளது. இந்த நிலையில், காங்கிரஸ் முன்னாள் தலைவர்கள் சோனியாகாந்தி மற்றும் ராகுல்காந்தி ஆகியோருக்கு எதிராக டெல்லி தனி நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.

அந்த வழக்கு, தனி நீதிபதி விஷால் கோக்னே முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்த போது குற்றப்பத்திரிகையை ஆய்வு செய்வதற்கு முன்பு, சோனியாகாந்தி, ராகுல்காந்தி உள்ளிட்டோரின் கருத்துகளை அறிய அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்புமாறு அமலாக்கத்துறை கேட்டுக்கொண்டது. ஆனால், அதனை ஏற்காத நீதிபதி வழக்கின் விசாரணையை மே2ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
இதையும் படிங்க: இது மோடி சர்க்கார்..! பதில் சொல்லியே ஆகணும் Mr. ராகுல்.. டெல்லி அமைச்சரின் வைரல் வீடியோ..!

இந்த நிலையில் இன்று வழக்கு விசாரணைக்கு வந்தபோது, வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்திக்கு நோட்டீஸ் அனுப்ப டெல்லி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. மேலும் வடக்கின் விசாரணையை மே 8-ம் தேதிக்கு நீதிபதி ஒத்தி வைத்தார்.
இதையும் படிங்க: ‘யாருக்கும் கொள்ளையடிக்க லைசன்ஸ் இல்லை’.. காங்கிரஸுக்கு பாஜக கண்டனம்..!