ஓரணியில் தமிழ்நாடு என்ற திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். திமுக நிர்வாகிகளுடன் தொடர்ந்து நடத்தி வரும் ஆலோசனைகள் இந்த “ஓரணியில் தமிழ்நாடு” என்ற கருப்பொருளை மையமாகக் கொண்டு செயல்படுகின்றன. இத்திட்டம் மக்களை ஒருங்கிணைத்து, அரசின் திட்டங்களையும் சேவைகளையும் திறம்பட வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இதற்காக உறுப்பினர் சேர்க்கை மற்றும் மக்களின் கைபேசி எண்ணைப் பயன்படுத்தி OTP பெறும் முறை பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால், இந்த ஓடிபி பெறும் செயல்முறை சமீபத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ஓடிபி பெறும் முறை தொடர்பாக எதிர்க்கட்சிகள், குறிப்பாக அதிமுக, பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தன.
மக்களின் கைபேசி எண்ணைப் பயன்படுத்தி ஓடிபி பெறுவது, தனிநபர் தரவுகளின் தனியுரிமையை மீறுவதாகவும், இது தவறாகப் பயன்படுத்தப்படலாம் என்றும் அவர்கள் குற்றம்சாட்டினர். இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இதையும் படிங்க: பொன்முடி வழக்கு.. எதன் அடிப்படையில முடிச்சு வச்சீங்க? தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி..!
இதனிடையே, ஓடிபி வழக்கு தொடர்பாக அதிமுக தரப்பில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டது. தற்போது உயர் நீதிமன்ற மதுரை கடையின் உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் திமுக மேல்முறையீடு செய்தது.

திமுகவின் மேல்முறையீடு தொடர்பாக ஆகஸ்ட் 4ம் தேதி விசாரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்கு தனிநபர் தரவு பாதுகாப்பு, அரசியல் கட்சிகளின் உறுப்பினர் சேர்க்கை முறைகள், மற்றும் தேர்தல் நடத்தை விதிகள் ஆகியவற்றை மையமாகக் கொண்டு முக்கியத்துவம் பெற்றது. இந்த வழக்கில் அதிமுக கேவியட் மனுத்தாக்கல் செய்து இருந்தது.
இந்த நிலையில், otp பெறும் விவகாரத்தில் உயர்நீதிமன்ற மதுரை கிளை விதித்த இடைக்கால தடையை நீக்ககோரிய திமுகவின் மேல்முறையீடு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. உயர்நீதிமன்ற உத்தரவில் தலையிட விரும்பவில்லை என்று தெரிவித்த நீதிபதிகள், மனுவை தள்ளுபடி செய்தனர்.
அதே வேளையில், இடைக்கால தடையை நீக்கக்கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையிலேயே மனு தாக்கல் செய்யவும் அனுமதி வழங்கி ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: சல்லி, சல்லியாய் நொறுங்கும் அதிமுக... திமுகவிற்கு தாவ தயாராகும் அடுத்த முக்கிய புள்ளிகள்...?