பகல்காம் தாக்குதல் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்தியா தக்க பதிலடி கொடுக்க ஆயத்தமாகி வருகிறது. 26 உயிர்கள் பறிபோனது கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில், பஹல்காம் தாக்குதல் குறித்து விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணைக்குழு அமைக்க உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு விசாரணையில் ஈடுபட்ட உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பஹல்காம் தாக்குதல் குறித்து மத்திய அரசு விசாரித்து வரும் நிலையில், அனைவரும் பயங்கரவாதத்திற்கு எதிராக ஒன்றிணைந்து இருக்க வேண்டும் என தெரிவித்தனர். தற்போதைய நிலையில் இந்த மனு விசாரணைக்கு உகந்ததல்ல என்றும் ஜம்மு காஷ்மீர் மாணவர்கள் பாதுகாப்பு தொடர்பான பிரச்சனை இருந்தால் உயர்நீதிமன்றத்தை அணுகலாம் என்றும் கூறினர்.
இதையும் படிங்க: போர் பதற்றம்... 29 நகரங்களில் அவசரகால சைரன்கள்... நடுக்கத்தில் பாகிஸ்தான்..!

பஹல்காம் தாக்குதல் குறித்து விசாரிக்க உச்சநீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை குழு அமைக்க முடியாது எனவும் விசாரணை அமைப்புகளுக்கு மனச்சோர்வை ஏற்படுத்துவது போன்று மனுதாரரில் பொதுநல மனு உள்ளது என கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
இதையும் படிங்க: பஹல்காமில் தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட்ட காட்சிகள்... உலகையே அதிர வைக்கும் வீடியோ