டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் பணியாற்றும் அதிகாரமில்லாத ஊழியரை ஒருவர் ராணுவ நடவடிக்கைகளை உளவு பார்த்து பாகிஸ்தானுக்கு தெரிவித்தது தெரியவந்ததையடுதத்து 24 மணி நேரத்துக்குள் அந்த ஊழியர் நாட்டைவிட்டு வெளியேற வேண்டும் என்று மத்திய அரசு நேற்று அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
பாகிஸ்தான் தூதரகத்தில் பொறுப்பு அதிகாரியிடம் காரணத்தை தெரிவிக்காமல் அந்த ஊழியரை நாட்டை விட்டு வெளியேற்ற வேண்டும் என்பதற்கான உத்தரவை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் பிறப்பித்துள்ளது.

எல்லையில் ராணுவ நடவடிக்கைகளை உளவுபார்த்து, அதை பாகிஸ்தானுக்கு ரகசியமாக தெரிவித்து பணம் பெற்றது தெரியவந்ததையடுத்து தூதரக ஊழியரை மத்திய அரசு உடனடியாக வெளியேற உத்தரவிட்டதாக மத்தியஅரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிங்க: பஹல்கம் தாக்குதல்... டெல்லி பாக்., தூதரகத்தில் கேக் வெட்டி கொண்டாட்டம்? அதிர்ச்சி வீடியோ..!
மத்திய வெளியுறவுத்துறை வெளியிட்ட அறிவிப்பில் “டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் பணியாற்றும் அதிகாரத்தில் இல்லாத ஊழியர் ஒருவர், தனது தகுதிக்கு ஏற்ற செயல்களைச் செய்யவில்லை. ஆதலால் உடனடியாக அவரை 24 மணி நேரத்துக்குள் வெளியேற்ற உத்தரவிடுகிறோம்” எனத் தெரிவித்துள்ளது. என்ன காரணம் என்பதையும் மத்திய வெளியுறவுத்துறை தெரிவிக்கவில்லை.

ஆனால், தி இந்து (ஆங்கிலம்) நாளேட்டிடம் மத்திய அரசு ஊழியர் ஒருவர் கூறுகையில் “பஞ்சாப் போலீஸார் கடந்த சில நாட்களுக்கு முன், எல்லையில் ராணுவப் படைகள் எங்கெங்கு குவிக்கப்பட்டுள்ளன, எங்கிருந்து எங்கு செல்கின்றன உள்ளிட்ட முக்கியத் தகவல்களை உளவுபார்த்து பாகிஸ்தான் ராணுவத்துக்கு அனுப்பியதாக இருவரைக் கைது செய்தனர். அந்த நபருடன் பாகிஸ்தான் தூதருக்கு நெருக்கமான தொடர்பும், பணப்பரிமாற்றமும் இருந்துள்ளது. கடந்த 7ம் தேதி முதல் இந்திய ராணுவம், விமானப்படை எங்கிருந்து எங்கு செல்கின்றன, எல்லையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தகவல்களை சேர்த்து பரிமாறியது தெரியவந்துள்ளது.
இந்த தகவல்களை உளவுபார்த்து பாகிஸ்தான் ராணுவத்துக்கு தெரிவித்தமைக்காக பணத்தையும் ஆன்லைன் மூலம் கைது செய்யப்பட்ட இருநபர்களும் பெற்றுள்ளனர். இந்த வழக்கில் அந்த இரு நபர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது, அந்த நபர்கள் அளித்த தகவலின் அடிப்படையில்தான் தூதரக ஊழியருக்கு தொடர்பு இருப்பதால் அவரை உடனடியாக நாட்டைவிட்டு வெளியேற்ற உத்தரவிடப்பட்டது.

எல்லைதாண்டிய உளவுபார்த்தல், தேசப்பாதுகாப்புக்காக படைகளை நிறுத்துதல், மாற்றுதல் ஆகிய ரகசிய நடவடிக்கைகளை நிறுத்தி, பாகிஸ்தான் சதியை முறியடித்ததில் முக்கிய மைல்கல்லாகும்” எனத் தெரிவித்தனர்.
இந்த விவகாத்தில் பாகிஸ்தான் தரப்பில் இருந்து இதுவரை எந்த பதிலும் இல்லை. இந்தியாவின் செயலுக்கு பதிலடியாக தூதரக அதிகாரியாரையும் வெளியேற்றவில்லை. பஹல்காம் தாக்குதலுக்குப்பின், பாகிஸ்தான் தூதரக அதிகாரி எண்ணிக்கையை 55 லிருந்து 30 ஆகக் குறைக்கப்பட்டது. அதேபோல இஸ்லாமாபாத்தில் உள்ள இந்தியத் தூதரகத்திலும் ஊழியர்கள் எண்ணிக்கையும் குறைக்கப்பட்டது.
இதையும் படிங்க: வதந்திகளை நம்பாதீங்க மக்களே..! கையிருப்பு அதிகமாக இருக்கிறது.. மத்திய அரசு விளக்கம்..!