பஞ்சாப் மாநிலம் பதின்டா, ஹோசியாபூர் அருகே பாகிஸ்தான் ராணுவம் ஏவிய ஏவுகணை வயல் வெளிகளில் விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட இடங்களுக்கு பாதுகாப்பு படை அதிகாரிகள் சென்று, அதனை செயலிழக்க செய்து பறிமுதல் செய்தனர்.

பாகிஸ்தானில் புகுந்து இந்தியா நடத்திய ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு பதிலடி கொடுக்கிறோம் என்ற பெயரில் நேற்று இரவு அடாவடித்தனமாக பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியது. காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களை குறி வைத்து போர் விமானம், ட்ரோன், ஏவுகணைகள் மூலம் தாக்கியது.துல்லியமான முறையில் தாக்குதலை முறியடித்த நம் ராணுவம், பாகிஸ்தான் அனுப்பிய F-16 ரக போர் விமானம் ஒன்றையும், இரண்டு JF-17 ரக போர் விமானங்களையும் சுட்டு வீழ்த்தியது. 8 ஏவுகணைகளையும் 50 ட்ரோன்களையும் வானிலேயே இடைமறித்து தவிடு பொடியாக்கியது.
இதையும் படிங்க: பிளாக் அவுட் என்றால் என்ன? பஞ்சாபில் பல மாவட்டங்களில் நேற்று இரவு முதல் கடைபிடிப்பு?

இந்திய ராணுவம் அழித்த ஏவுகணைகளின் பாகங்கள், பஞ்சாப் எல்லை கிராமங்களின் வயல்வெளிகளில் சிதறிக் கிடந்தன. பாகிஸ்தானின் ஏவுகணைகள் சில மக்கள் வசிக்கும் பல்வேறு இடங்களில் விழுந்துள்ளது. பஞ்சாப் மாநிலம் ஹோசியாபூரிலும் பாகிஸ்தானின் ஏவுகணை சுட்டு வீழ்த்தப்பட்டதால் கீழே விழுந்தது. சுமார் 100 கிமீ தூரத்திற்கு பறந்து வந்து விழுந்த ஏவுகணையை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். பாகிஸ்தானின் போர் விமானமான J10 அல்லது JF17ல் இருந்து இந்த ஏவுகணை வந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

இதேபோல் இந்தியாவின் எஸ்யு 30 விமானங்களைத் தாக்க பாகிஸ்தான் அனுப்பிய சீனத் தயாரிப்பு ஏவுகணையான PL 15 BVR எந்த சேதம் இல்லாமல் வயல் வெளியில் விழுந்து கிடந்தது. அதை செயலிழக்க செய்ய அதிகாரிகள் கைப்பற்றி எடுத்து சென்றனர். அதன்பின்னர் அந்த ஏவுகணை தொழில்நுட்ப ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டது அமெரிக்கா அதன் தரவுகளை கோரியுள்ளது.
இதையும் படிங்க: ராணுவத்துக்கு 9 மடங்கு அதிகம் செலவிடும் இந்தியா.. பாக்.-ஐ எச்சரித்த ஸ்வீடன் நிறுவனம்..!