பாகிஸ்தான் ராணுவம் நேற்று இந்தியாவின் எல்லையோர மாநிலங்களில் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து பஞ்சாப் மாநிலத்தின் பல மாவட்டங்களில் நேற்று பிளாக்அவுட் கடைபிடிக்கப்பட்டது.

பிளாக்அவுட் (blackout) என்றால் என்ன?
பிளாக்அவுட் என்பது போர்க்காலத்தில் குடியிருப்பு பகுதிகளில் அனைத்து மக்களும் தங்களின் வீடுகள், கடைகள், தொழிற்சாலைகளில் உள்ள விளக்குகளை அனைத்து இருட்டாக காட்சியளிப்பதாகும். இதனால் எதிரிநாட்டு விமானங்கள் எளிதாக தாக்குதல் நடத்த முடியாமல் மறைந்து கொண்டு இரட்டடிப்பு செய்வதாகும். இந்த பிளாக்அவுட் செய்வதற்காக போர்க்காலத்தில் ஒவ்வொரு அரசும் மக்களுக்கு பிரத்தேயக விழிப்புணர்வு, பயிற்சி அளிக்கும், சில நேரங்களில் அபாய சங்கொலி எழுப்பி எச்சரிக்கும்போது மக்கள் வீடுகளில் உள்ள விளக்குகளை அனைத்துவிட வேண்டும்.
இதையும் படிங்க: பஞ்சாப் நோக்கி பாய்ந்த ஏவுகணை.. எல்லைமீறும் பாக்., தவிடுபொடியாக்கிய இந்தியா..!

காஷ்மீரின் பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக நேற்று முன்தினம் இரவு பாகிஸ்தான், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் தீவிரவாதிகள் முகாம்கள் மீது இந்திய ராணுவம் குண்டுவீசி தாக்குதல் நடத்திய அழித்தது. இதற்குப் பதிலடியாக பாகிஸ்தான் ராணுவம் நேற்று இரவு எல்லைஓர மாநிலங்கள் மீது நேற்று தாக்குதல் நடத்த முயன்றனர்.
அப்போது பாகிஸ்தான் விமானத் தாக்குதலில் இருந்து மக்களைக் காக்கும் வகையில் பிளாக்அவுட் கடைபிடிக்கப்பட்டது. குறிப்பாக பஞ்சாப் மாநிலத்தில் பதான்கோட், அமிர்தசரஸ்,ஜலந்தர், ரூப்நகர், பஸில்கா, லூதியானா, ஹோசியார்பூர், ஷாகிப்ஜதா அஜித் சிங் நகர், சண்டிகரில் நேற்று இரவு 8 மணியிலிருந்து பிளாக்அவுட் கடைபிடிக்கப்பட்டது.

இதனால் வீடுகளில் மக்கள் மின்விளக்குகளை அனைத்து வீட்டுக்குள்ளே இருந்து, இருளாக மாற்றினர். ஜலந்தரில் இரவு 11.20மணிக்கு வானில் பறந்த ட்ரோன் விமானத்தை பாதுகாப்பு படையினர் சுட்டு வீழ்த்தினர். பதன்கோட் மாவட்டம் சுஜான்பூரைச் சேர்ந்த உள்ளூர் வாசி கூறுகையில் “ இரவு முழுவதும் குண்டுவெடிக்கும் சத்தம் கேட்டது. சத்தம் கடுமையாக வெடிகுண்டு வெடிப்பது போல் இருந்தது, இடைவிடாது வாகனங்களின் சைரன் ஒலித்துக்கொண்டே இருந்தது, மிகுந்த அச்சமாக இருந்தது.
வானில் போர் விமானங்கள் பறப்பதாகக் கூறி எச்சரிக்கை மணி ஒலித்து இரவு 8.30 மணியிலிருந்து பிளாக்அவுட் கடைபிடிக்கப்பட்டது. மக்கள் அனைவரும் வீடுகளில் மின்விளக்குகளை அணைத்துவிட்டு, வீட்டுக்குள்ளே இருக்கும்படி அதிகாரிகள் கேட்டுக்கொண்டர், யாரும் அச்சப்பட வேண்டாம் எனவும் தெரிவித்தனர்” எனத் தெரிவித்தார்.

பதான்கோட் காவல் துணை ஆணையர் ஆதித்யா உப்பால் கூறுகையில் “ எல்லை ஓர மாவட்டங்களில் வசிக்கும் மக்கள் இரவு நேரத்தில் வீட்டுக்கள்ளே இருக்கும்படி கேட்டுக்கொள்கஇறோம். பிளாக்அவுட் அறிவித்தவுடன் வீட்டை விட்டு வராதீர்கள். மக்களின் பாதுகாப்புக்காவே முன்னெச்சரிக்கையாக பிளாக்அவுட் அறிவிக்கிறோம்” எனத் தெரிவித்தார்.
மொஹாலி மாவட்ட நிர்வாகம் தங்கள் வான்எல்லைக்கு உள்பட்ட ஷாஹிப்சாதா அஜித் சிங் நகர் பகுதியை பறக்க தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. பஞ்சாப் மாநிலம் உச்சகட்ட அலர்ட்டில் வைக்கப்பட்டுள்ளது, அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டு, விடுமுறையில் இருக்கும் காவலர்கள், பாதுகாப்புப்படை வீரர்கள் உடனடியாக பணிக்குத் திரும்பும்பபடி உத்தரவிட்டுள்ளது.
இதையும் படிங்க: அடிபட்டும் அடங்காத பாக்., அதிகாலை காலை அனுப்பிய அஸ்திரம்... சுக்குநூறாக்கிய இந்தியா..!