காஷ்மீர் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க 2 நாள் முன்பு நள்ளிரவில் நம் ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை எடுத்தது. பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்குள் புகுந்து அங்கிருந்த பயங்கரவாதிகளின் தலைமை இடம் உட்பட 9 முகாம்களை குண்டு வீசி தகர்த்தது. இந்த அட்டாக்கில் பயங்கரவாதி மசூத் அசாரின் குடும்பத்தினர் 10 பேர் உட்பட மொத்தம் 100 பேர் கொல்லப்பட்டனர். பாகிஸ்தான் ராணுவ நிலைகளை நாம் குறிவைக்கவில்லை. முழுக்க முழுக்க பயங்கரவாதிகள் முகாம்களை தான் தகர்த்தோம்.

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு நம் பதிலடி இதோடு முடிந்து விட்டது. பாகிஸ்தானும் இதை புரிந்து கொண்டு அமைதி காத்திருக்க வேண்டும்.ஆனால் அப்படி செய்யவில்லை. தொடர்ந்து பயங்கரவாதிகளுக்கு ஆத்ரவு அளித்து வந்தது. பயங்கரவாதிகளுக்கு ஆதரவளிப்பதை நிறுத்தும் வரை சிந்து நதிநீர் ஒப்பந்தம் ரத்து செய்யப்படுவதாக இந்தியா அறிவித்திருந்தது. ஆனாலும் பாகிஸ்தான் அடம் பிடித்து வருகிறது. அதுமட்டும் அல்லாமல் இந்தியாவின் பதிலடி தாக்குதலில் உயிர் இழந்த பயங்கரவாதிகளின் குடும்பத்தினருக்கும் ஆதரவு அளித்தது. பயங்கரவாதிகளி இறுதி சடங்கிலும் பாகிஸ்தானின் உயர்மட்ட ராணுவ அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: போருக்கு தயாராகிறதா பாக்.? எல்லையில் வீரர்கள் குவிப்பு.. இந்தியாவின் பதில் என்ன?

இந்தியா நடத்திய பதில் தாக்குதலில் பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டன. பாகிஸ்தானின் லாகூரில் இருந்து 40 கி.மீ., தொலை வில் உள்ள முரிட்கேயில், நம் ராணுவத்தினர் நடத் திய தாக்குலில், ஜமாத் உத்-தாவா பயங்கரவாத அமைப்பின் தலைமையகம் தரைமட்டமாக்கப்பட்டது. அதில் கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் அப்துல் மாலிக், காலித், முதாசிர் ஆகியோரின் இறுதிச் சடங்குகள், முரிட்கேயில் நேற்று பலத்த பாதுகாப்புடன் நடந்தன. அதில், பாக்., ராணுவத்தின் உயர் அதிகாரிகள் பங்கேற்றதாக அந்த பயங்கரவாத அமைப்பின் அரசியல் பிரிவான பாகிஸ்தான் மார்கஜி முஸ்லிம் லீக்கின் செய்தி தொடர் பாளர் தபிஸ் கய்யூம் தெரிவித்தார்.

இறுதிச்சடங்குகளுக்கு பின், மூன்று பயங்கரவாதிகளின் உடல்களும், சொந்த ஊர்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டு அடக்கம் செய்யப்பட்டன. பயங்கரவாதிகளின் இறுதிச் சடங்கில் பாக்., ராணுவ அதிகாரிகள் பங்கேற்றதால், பயங்கரவாதிகளுடன் பாகிஸ்தான் ராணுவத்துக்குள்ள தொடர்பு அம்பலமாகியுள்ளது. இந்த நிலையில் பயங்கரவாத அமைப்பான ஐ.எஸ்.ஐ அமைப்பு மற்றும் பாகிஸ்தான் ராணுவத்தில் உள்ள முக்கிய அதிகாரிகள், அரசுத்துறை அதிகாரிகள் உள்ளிட்ட பலர் இந்த இறுதி சடங்கில் பங்கேற்றிருப்பது சர்ச்சை ஏற்படுத்தியது இருக்கிறது.

இந்த நிலையில் பாகிஸ்தான் ராணுவ செய்தி தொடர்பாளர் அகமது ஷரீப் சவுத்ரியின் தந்தை ஜநாவால் பயங்கரவாதி என அங்கீகரிப்பட்டவர் என தெரியவந்துள்ளது. பாகிஸ்தான் ராணுவ உயர் பொறுப்பில் உள்ள அகமது ஷரீப்பின் தந்தை சுல்தான் பஷீருதின் மக்மூத், ஒசாமா பின்லேடனுக்கு அணு ஆயுதங்கள், ரசாயணம், உயிரி ஆயுதங்கள் குறித்து விவரங்களை தெரிவித்தவார் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.
இதையும் படிங்க: மக்களுக்கு குறி வைக்கும் பாக்., நன்றி மறந்த துருக்கியுடன் நயவஞ்சக கூட்டணி.. அமிர்தசரஸில் ரெட் அலர்ட்..!