இந்தியாவில், தேர்தல் ஆணையம் ஒவ்வொரு ஆண்டும் வாக்காளர் பட்டியலைத் திருத்தும் பணியை மேற்கொள்கிறது. இந்தச் செயல்முறையில் புதிய வாக்காளர்களைச் சேர்ப்பது, இறந்தவர்கள் அல்லது இடம்பெயர்ந்தவர்களின் பெயர்களை நீக்குவது, மற்றும் பிழைகளைத் திருத்துவது ஆகியவை அடங்கும். இந்தத் திருத்தம் தேர்தல்களின் நேர்மையை உறுதி செய்ய முக்கியமானதாகக் கருதப்படுகிறது. 2025-இல், தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியலைத் திருத்துவதற்கு முன்னெடுத்த பணிகள், குறிப்பாக பிற்படுத்தப்பட்ட, தலித், மற்றும் சிறுபான்மை சமூகங்களைச் சேர்ந்த வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்படுவதாகக் கூறப்படும் நிகழ்வுகள், காங்கிரஸ் கட்சியின் கடும் எதிர்ப்புக்கு உள்ளாகியுள்ளன.
காங்கிரஸ் கட்சி, வாக்காளர் பட்டியல் திருத்தத்தில் பாரதிய ஜனதா கட்சி மற்றும் தேர்தல் ஆணையத்தின் ஒருதலைப்பட்சமான செயல்பாடுகளால், வாக்காளர்களின் உரிமைகள் பறிக்கப்படுவதாகக் குற்றம் சாட்டுகிறது. இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் காங்கிரஸ் வழக்கு தொடுத்தது. அப்போது, பீகார் மட்டுமல்ல நாடு முழுவதும் வாக்காளர் சிறப்பு திருத்தம் மேற்கொள்ளப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்தது.

வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் தெரிவித்து விவாதிக்க கோரி நாடாளுமன்றத்தில் எதிர் கற்று உறுப்பினர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். வாக்காளர் சிறப்பு திருத்தம் குறித்து நேற்று காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிகள் 20 நோட்டீஸ் கொடுத்த நிலையில் விவாதிப்பதற்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் நாடாளுமன்றத்தில் கூச்சம் குழப்பம் நிலவியதால் அவை ஒத்திவைக்கப்பட்டன.
இதையும் படிங்க: கடமையை செய்யச் செல்கிறேன்! MP ஆக பதவியேற்க டெல்லி புறப்பட்ட கமல்ஹாசன்...
இந்த நிலையில் எம்பிக்கள் அகிலேஷ் பிரசாத் சிங், ரஞ்சித் ரஞ்சன் ஆகியோர் பீகாரில் வாக்காளர் பட்டியல்களின் சிறப்பு தீவிர திருத்தத்தின் அரசியலமைப்பு மற்றும் தேர்தல் தாக்கங்கள் குறித்து விவாதிக்கக் கோரி, விதி 267 இன் கீழ் மாநிலங்களவையில் அலுவல் இடைநீக்க அறிவிப்பை அளித்துள்ளனர். மீண்டும் அனுமதி மறுக்கப்படும் நிலையில் இன்றைய அவை நடவடிக்கைகளும் பாதிக்கப்படும் என சொல்லப்படுகிறது.
இதையும் படிங்க: எதிர்க்கட்சிகளின் தொடர் அமளி.. கட்டுக்கடங்காத குழப்பம்! 3வது நாளாக முடங்கிய அவை நடவடிக்கைகள்..!