வாக்காளர் பட்டியல் திருத்தத்தில் பாரதிய ஜனதா கட்சி மற்றும் தேர்தல் ஆணையத்தின் ஒருதலைப்பட்சமான செயல்பாடுகளால், வாக்காளர்களின் உரிமைகள் பறிக்கப்படுவதாகக் குற்றம் சாட்டப்படுகிறது. இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் காங்கிரஸ் வழக்கு தொடுத்தது. அப்போது, பீகார் மட்டுமல்ல நாடு முழுவதும் வாக்காளர் சிறப்பு திருத்தம் மேற்கொள்ளப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்தது.
வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் தெரிவித்து விவாதிக்க கோரி நாடாளுமன்றத்தில் எதிர் கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
வாக்காளர் சிறப்பு திருத்தம் குறித்தும் தேர்தல் ஆணையம் குறித்தும் பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்படுவதற்கு பதிலடி கொடுக்கப்பட்டது. விமர்சனம் செய்பவர்களுக்கு தேர்தல் ஆணையம் பல கேள்விகளையும் முன் வைத்தது.
இதையும் படிங்க: எதிர்பார்ப்புடன் காத்திருந்த முக்கிய விவாதம்! பிரதமர் மோடி பார்லிமென்ட்க்கு வருகை... பரபரப்பு!
இந்திய அரசியலமைப்புச் சட்டம் இந்திய ஜனநாயகத்தின் தாய் என்றும் தேர்தல் ஆணையம், சிலரால் தவறாக வழிநடத்தப்பட்டு, இறந்த வாக்காளர்கள், நிரந்தரமாக இடம்பெயர்ந்த வாக்காளர்கள், இரண்டு இடங்களில் வாக்குகளைப் பதிவு செய்த வாக்காளர்கள், போலி வாக்காளர்கள் அல்லது வெளிநாட்டு வாக்காளர்கள், அரசியலமைப்பிற்கு எதிராக, வாக்களிப்பவர்களை நீக்க வேண்டியது அவசியம் இல்லையா என கேள்வி எழுப்பியது.

பீகார் வாக்காளர் சிறப்பு திருத்தம் தொடர்பாக விவாதித்து ஆகவேண்டும் எனக் கூறி ஐந்தாவது நாளாக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் அமளியில் ஈடுபட்டனர். இதனால் மக்களவை, மாநிலங்களவை நடவடிக்கைகள் முடங்கின. எதிர்க்கட்சி உறுப்பினர்களின் தொடர் கூச்சல், முழக்கத்தால் மக்களவை பிற்பகல் ஒரு மணி வரையும், மாநிலங்களவை பிற்பகல் 2 மணி வரையும் ஒத்திவைக்கப்பட்டது.
ஆப்ரேஷன் சிந்தூர் தொடர்பாக விவாதம் நடத்த வேண்டுமா இல்லையா., இவ்வாறு நடந்து கொள்வது முறையா என மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கேள்வி எழுப்பி அவையை ஒத்தி வைத்தார்.
இதையும் படிங்க: #BREAKING: மாநிலங்களவையில் திமுக எம்.பிக்கள் தமிழில் பதவியேற்பு..!