நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 21 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 12 வரை டெல்லியில் நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தொடரில் ஒன்றிய அரசு வரி விதிப்பு, விளையாட்டு, கல்வி, சுரங்கம், கப்பல் போன்ற துறைகள் தொடர்பாக 8 முக்கிய மசோதாக்களை அறிமுகம் செய்து நிறைவேற்ற திட்டமிட்டுள்ளது.
எதிர்க்கட்சிகள் பல முக்கிய பிரச்சினைகளை எழுப்பவும், அரசுக்கு நெருக்கடி கொடுக்கவும் வியூகம் வகுத்தன. குறிப்பாக பகல் காம் தாக்குதல் தொடர்பாக விவாதிக்க கோரி நாடாளுமன்ற இரு அவைகளிலும் அமளியில் எதிர்கட்சி உறுப்பினர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தியா - பாகிஸ்தான் போர் நிறுத்தம் தம்மால் தான் ஏற்பட்டதாக 24 முறை டிரம்ப் கூறியிருக்கிறார் அது தொடர்பாகவும், பகல்வாமில் 26 அப்பாவி பயணிகளை சுட்டுக்கொன்ற தீவிரவாதிகள் எங்கே எனவும் கேள்வி எழுப்பி உள்ளனர்.
இதையும் படிங்க: #BREAKING: மாநிலங்களவையில் திமுக எம்.பிக்கள் தமிழில் பதவியேற்பு..!

மேலும், தீவிரவாதிகள் கைது செய்யப்படவுமில்லை, அவர்கள் கொல்லப்படவும் இல்லை., தீவிரவாத தாக்குதலில் என்ன நடந்தது என்பதை தெளிவுபடுத்த வேண்டும் என வலியுறுத்தினர். ஆப்ரேஷன் சிந்தூர் குறித்து உரிய விளக்கம் தரப்படும் என அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்து இருந்தார்.
இந்த நிலையில் 5வது நாளாக நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பீகார் வாக்காளர் சிறப்பு திருத்தம் குறித்து விவாதிக்க வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.
இதற்கிடையில் , நாடாளுமன்ற சிறப்பு விவாதம் தொடர்பாக இந்தியா கூட்டணி கட்சிகள் ஒன்று கூடி ஆலோசனை நடத்தின. மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி, சோனியா காந்தி உள்ளிட்ட தலைவர்கள் ஆலோசனை நடத்தினர்.
இதனிடையே, நாடாளுமன்றத்தில் 16 மணி நேரம் பகல்காம் விவகாரம் தொடர்பாக விவாதம் நடைபெற உள்ளது. இன்றும் நாளையும் விவாதம் நடைபெற உள்ள நிலையில் பிரதமர் மோடி நாடாளுமன்றத்திற்கு வருகை தந்தார்.
இதையும் படிங்க: "கமல்ஹாசன் எனும் நான்"... மாநிலங்களவையில் தமிழில் பொறுப்பேற்ற கமல்..!