வெள்ளிக்கிழமை, 6 நவம்பர் 2026
இந்தியா

பிளாப் அட்ஜஸ்ட்மெண்டில் பிரச்சனை; தொடரும் போயிங் விமான கோளாறுகள்.. நடுவானில் நிகழ்ந்த அதிர்ச்சி சம்பவம்!!

லண்டனில் இருந்து சென்னைக்கு இன்று புறப்பட்ட பிரிட்டிஷ் ஏர்வேஷ் விமானத்தில் நடுவானில் இயந்திர கோளாறு ஏற்பட்டதால் பயணிகள் பீதியடைந்தனர்.

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து கடந்த 12 ஆம் தேதி லண்டனுக்கு 242 பேருடன் ஏபுறப்பட்டு சென்ற விமானம் சில நிமிடங்களில் கீழே விழுந்து நொறுங்கியது. இந்த பயங்கர விபத்தில் விமானத்தில் பயணம் செய்த ஒரே ஒரு பயணியை தவிர அனைவரும் உயிரிழந்தனர். விமானம் மருத்துவ விடுதியில் விழுந்து நொறுங்கியதில் தரையில் இருந்தவர்களும் பலியாகினர். பலர் காயம் அடைந்தனர். இந்த சம்பவத்தால் பயணிகள் பீதியில் உள்ளனர். இந்த நிலையில் லண்டனில் இருந்து சென்னைக்கு இன்று புறப்பட்ட பிரிட்டிஷ் ஏர்வேஷ் விமானத்தில் நடுவானில் இயந்திர கோளாறு ஏற்பட்டதால் பயணிகள் பீதியடைந்தனர்.  சென்னை – லண்டன் இடையே பிரிட்டிஷ் ஏர்வேஷ் விமான நிறுவனம் இயக்கப்பட்டு வருகிறது.

இந்த விமானத்தில் லண்டனுக்கு செல்லும் பயணிகள் மட்டும் இன்றி நெதர்ல்நாந்து, ஸ்காட்லாந்து, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளுக்கு செல்லும் பயணிகளும் பயணம் செய்வர். லண்டனில் இருந்து புறப்பட்டு இந்த விமானம் அதிகாலை 3.30 மணிக்கு சென்னை சர்வதேச விமான நிலையம் வந்து சேரும். அதேபோல, சென்னையில் இருந்து அதிகாலை 5.35 க்கு புறப்பட்டு லண்டனுக்கு புறப்பட்டு செல்கிறது.

இதையும் படிங்க: ஆமதாபாத் விமான விபத்து.. இன்று குடும்பத்தாரிடம் உடல்கள் ஒப்படைப்பு..!

இந்த விமானம் நேற்று லண்டனில் இருந்து வழக்கம் போல 360 பயணிகளுடன் புறப்பட்டு சென்னைக்கு வந்து கொண்டிருந்தது.  விமானம் நடுவானில் வந்து கொண்டிருந்த போது விமானத்தில் கோளாறு ஏற்பட்டு இருப்பதை விமானி கண்டுபிடித்தார். இதையடுத்து, உடனடியாக விமானம் லண்டனுக்கே திருப்பி விடப்பட்டது. இதையடுத்து லண்டன் ஹீத்ரோ விமான நிலையத்தில் விமானம் பத்திரமாக தரையிறக்கப்பட்டது.

விமானத்தில் Flap adujstment failure ஏற்பட்டதால், உடனடியாக எரிபொருள் வெளியேற்றப்பட்டு லண்டனில் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது. இந்த விமானம் போயிங் 787 ரக விமானம் ஆகும். அகதாபாத்தில் விபத்துக்குள்ளான விமானமும் இதே ரக விமானம் என்பது கவனிக்கத்தக்கது. சென்னைக்கு வந்த விமானம் அவசரமாக திருப்பிவிடப்பட்டதால், சிறிது நேரத்தில் சென்னையில் இருந்து லண்டன் வர இருந்த விமானமும், சென்னையில் இருந்து அதிகாலை புறப்படும் விமானமும் ரத்து செய்வதாக அறிவிக்கப்பட்டது. இதனால், லண்டன் செல்ல வந்திருந்த பயணிகள் தவிப்புக்கு உள்ளாகினர். 

இதையும் படிங்க: உயிரிழந்தோரின் குடும்பத்தினருடன் அரசு துணை நிற்கும்… நேரில் ஆறுதல் சொன்ன அமித்ஷா!!

மேலும் படிங்க

சமீபத்திய செய்திகள்

அனைத்தும்
ஜெகன் மோகன் ரெட்டி வீட்டு திருமணம்: நேரில் வாழ்த்திய முதலமைச்சர் விஜய் மற்றும் த்ரிஷா!தமிழ்நாடு
காசிமேடு மீனவர்கள் உயிரிழப்பு: தவெக அரசுக்கு எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி கண்டனம்!தமிழ்நாடு
ஆந்திரக் கடலில் உயிரிழந்த சென்னை மீனவர்கள்: தலா ₹7 லட்சம் நிவாரணம் அறிவித்தார் முதல்வர் விஜய்!தமிழ்நாடு
களத்தில் அதிரடி காட்டும் ஜான் ஒசாஃப்.. அமெரிக்காவின் அடுத்த ஒபாமாவாக உருவெடுப்பாரா? ஜார்ஜியா தேர்தல் வெற்றி சொல்வது என்ன?உலகம்
தீபாவளி பரிசுப் பொருட்கள் விநியோகம்.. தேர்தலுக்கு முன்பே களமிறங்கிய தவெக! ரகுபதி பரபரப்பு குற்றச்சாட்டு!!தமிழ்நாடு
தீபாவளி பண்டிகை: சென்னை மெட்ரோ ரயில்களில் மாலை நேர ‘பீக் ஹவர்ஸ்’ சேவை நீட்டிப்பு!தமிழ்நாடு
© 2026 Skycast Media Network Pvt Ltd, or its affiliated brands and companies. All rights reserved. TamilWire® is a registered trademark of Skycast Media Network Pvt Ltd. English · हिंदी