இந்திய எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் ட்ரோன் தாக்குதல் நடத்தியது. வான் வழியாக மட்டுமல்லாமல் தரை வழியாகவும் தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. மூன்று பாகிஸ்தானின் போர் விமானங்களை இந்தியா சுத்துபடுத்திய நிலையில் ஜெய் சால்மரில் மட்டும் 20 ஏவுகணைகளை இந்தியா இடைமறித்துள்ளது.

இது மட்டுமல்லாது பஞ்சாப் மாநிலம் பத்தான் கோட்டில் இரண்டு இடங்களில் பாகிஸ்தான் தாக்குதல் நடத்தி உள்ளது. போர் பதற்றம் தீவிரமடைந்துள்ள நிலையில் பதில தாக்குதல், பாதுகாப்பு நடவடிக்கை உள்ளிட்டவை தொடர்பாக பாதுகாப்பு துறை அமைச்சர் முப்படை தலைமை தளபதி மற்றும் பாதுகாப்பு தளபதிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.
இதையும் படிங்க: எகிறும் பாக். ராணுவம்....போர் பதற்றம் கூடாது! வார்னிங் கொடுத்த அமெரிக்கா...

இந்த நிலையில் பிரதமர் மோடியுடன் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் அவசர ஆலோசனை மேற்கொண்டுள்ளார். பாகிஸ்தானின் இந்த திடீர் தாக்குதலால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், அசாதாரண சூழல் உள்ளிட்டவை தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிகிறது. தாக்குதல் நடத்தப்பட்ட இடங்களில் நிலைமை குறித்து பிரதமர் மோடி கேட்டறிந்துள்ளார்.
இதையும் படிங்க: முக்கிய இடங்களை குறி வைத்து ட்ரோன் தாக்குதல்... பாக். போர் விமானங்களை சுட்டு வீழ்த்திய இந்தியா!