செங்கோட்டையில் இன்று ஆற்றிய சுதந்திர தின உரை மூலமாக பிரதமர் மோடி நாட்டின் கோடிக்கணக்கான மக்களுக்கு ஒரு பெரிய நிவாரணத்தை அறிவித்துள்ளார். “இந்த தீபாவளியை, உங்களுக்காக இரட்டை மகிழ்ச்சியாக மாற்றப் போகிறேன். இந்த தீபாவளிக்கு, நாங்கள் ஒரு பெரிய சீர்திருத்தத்தைச் செய்யப் போகிறோம். கடந்த எட்டு ஆண்டுகளில், ஜிஎஸ்டி மூலம் வரி முறையை எளிமைப்படுத்தியுள்ளோம். எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு, அதை மறுபரிசீலனை செய்வது காலத்தின் தேவை. நாங்கள் அதை மறுபரிசீலனை செய்துள்ளோம்.
இதுகுறித்து மாநில அரசுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. அடுத்த தலைமுறை ஜிஎஸ்டி சீர்திருத்தங்களை நாங்கள் கொண்டு வருகிறோம். மிகப் பெரிய வசதி உருவாக்கப்படும். நமது தொழில்கள் ஒரு பெரிய நன்மையைப் பெறும். அன்றாடப் பொருட்கள் மலிவாக மாறும், இது பொருளாதாரத்திற்கு ஒரு பெரிய ஊக்கத்தை அளிக்கும்” என்றார்.
அண்மையில், அந்நிய நேரடி முதலீடு (FDI), காப்பீட்டுத் துறை மற்றும் உலகத் தரம் வாய்ந்த பல்கலைக்கழகங்கள் இந்தியாவில் செயல்பட அனுமதிப்பது போன்ற பல சீர்திருத்தங்களை நாம் செயல்படுத்தியுள்ளோம். பிறருடைய கோட்டைச் சிறிதாக்க, நம் ஆற்றலை நாம் வீணடிக்கக் கூடாது. நம்முடைய கோட்டை முழு ஆற்றலுடன் நீளமாக்க வேண்டும்'.
இதையும் படிங்க: நாடே எதிர்பார்த்த தருணம்...“அந்த வார்த்தையை அழுத்திச் சொன்ன பிரதமர் மோடி”... பாகிஸ்தானுக்கு மரண பீதி...!
அப்படி நாம் செய்தால், உலகம் நம் வலிமையை ஏற்றுக்கொள்ளும். இன்றைய உலகச் சூழலில், பொருளாதாரத் சுயநலம் அதிகரித்து வரும் நிலையில், நாம் அந்த நெருக்கடிகளைப் பற்றி அழுது கொண்டிருக்காமல், துணிச்சலுடன் நம் கோட்டை நீளமாக்க வேண்டும். இந்த வழியை நாம் பின்பற்றினால், எந்தவொரு சுயநலமும் நம்மை சிக்க வைக்க முடியாது என்றார்.
இதையும் படிங்க: 12வது முறையாக தேசிய கொடியேற்றிய பிரதமர் மோடி... 79வது சுதந்திர தின விழாவில் மைல்கல் சாதனை....!