1944 ஆம் ஆண்டு மே 24ஆம் தேதி பினராயி விஜயன் பிறந்தார். 2016ம் ஆண்டு முதல் தற்போது வரை கேரளாவின் முதலமைச்சர் ஆக இருந்து வருகிறார். இந்திய பொதுவுடமை கட்சியை சேர்ந்தவரான பினராயி விஜயன், முத்த அரசியல்வாதியும் ஆவார்.

இந்த நிலையில் இன்று பிறந்தநாள் கொண்டாடும் கேரள முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, கேரள முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் என்றும் அவர் நீண்ட ஆயுளோடு ஆரோக்கியமாக வாழவும் வாழ்த்துவதாக தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: பயங்கரவாத எதிர்ப்பு... ரஷ்யா செல்கிறது கனிமொழி தலைமையிலான குழு..!

இதையும் படிங்க: இறக்குமதிக்கு கட்டுப்பாடு.. வங்கதேசத்தின் பொருட்களுக்கு தடை..! பட்டியலிட்ட மத்திய அரசு..!