ஆபரேஷன் சிந்தூருக்கு பிறகு முதல் முறையாக நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது பேசிய அவர், ஆபரேஷன் சிந்தூரை வெற்றகரமாக மேற்கொண்ட ராணுவத்திற்கும் விஞ்ஞானிகளுக்கும் சல்யூட் அடிக்கிறேன். ராணுவ வீரர்களுக்கு நான் தலை வணங்குகிறேன். நாட்டின் அனைத்து தாய்மார்களுக்கும் இந்நாட்டின் மகள்களுக்கு இந்த வீரமான வெற்றியை அர்ப்பணிக்கிறேன். துளியும் கருணை இல்லாமல் சுற்றுலா பயணிகளை பயங்கரவாதிகள் கொன்றனர். குடும்பத்தினர் கண்முன்னே அப்பாவி சுற்றுலா பயணிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். பஹல்காம் தாக்குதல் தனிப்பட்ட முறையில் மிகுந்த மன வலியை ஏற்படுத்தியது. மே 7ஆம் தேதி காலை நமது மன உறுதியின் விளைவை உலகமே பார்த்தது.

நம் தாக்குதலில், தீவிரவாதிகள் மட்டுமல்ல, அவர்களுக்கு உடந்தையாக இருந்தவர்களும் ஆடிப்போயுள்ளனர். நம் பெண்களின் குங்குமத்தை அழித்ததற்கான விளைவுகளை அவர்கள் சந்தித்துள்ளனர். இந்தியாவின் தாக்குதலில் 100க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர். பயங்கரவாதிகளின் முகாம்கள் மட்டுமல்ல, அவர்களின் உணர்வுகளும் சிதைந்துள்ளன. பாகிஸ்தான் எதிர்பார்க்காத அளவிற்கு பலத்த சேதத்தை இந்தியா கொடுத்துள்ளது. அதனால்தான், இந்தியாவின் ஆவேசமான தாக்குதலை தாங்க முடியாமல், உலக நாடுகள் தலையிட பாகிஸ்தான் கெஞ்சியது.
இதையும் படிங்க: தண்ணீரும் ரத்தமும் ஒன்றாக ஓட முடியாது... பாகிஸ்தானுக்கு பிரதமர் மோடி மறைமுக எச்சரிக்கை!!

பயங்கரவாதத்தை பாகிஸ்தான் ஊக்குவிக்கும் விதத்தை பார்க்கும் போது, ஒருநாள் அந்த நாட்டையே அது அழித்துவிடும். பாகிஸ்தான் இருக்க வேண்டும் என அவர்கள் நினைத்தால், பயங்கரவாத முகாம்களை அழிக்க வேண்டும். பயங்கரவாதமும், பேச்சுவார்த்தையும் ஒரே நேரத்தில் இருக்கக் கூடாது என்பதே இந்தியாவின் நிலைப்பாடு. பயங்கரவாதமும் வணிகமும் கூட ஒரே நேரத்தில் இருக்க முடியாது. போர் நிறுத்தம் தற்காலிகமானது தான். நமது படைகள் பாகிஸ்தானை கண்காணிக்கின்றன. இனிமேல் அவர்கள் வாலாட்டினால் பதிலடி பயங்கரமாக இருக்கும்.

பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தான் படைகள் மரியாதை செலுத்தியதை உலகமே பார்த்தது. பயங்கரவாதிகளை ஆதரிக்கும் அரசும் எதிர்க்கும் அரசும் ஒன்றாக உறவாட முடியாது. பயங்கரவாதிகளுக்கு உதவி செய்பவர்களும் ஒன்று தான். அவர்களும் பயங்கரவாதிகள் தான். இந்த பதிலடி பயங்கரவாதத்திற்கு மட்டுமல்ல பயங்கரவாதத்தை ஆதரிப்பவர்களுக்கும் சேர்த்து தான். தண்ணீரும் ரத்தமும் ஒன்றாக ஓட முடியாது. அதுபோல, பயங்கரவாத நடவடிக்கைகளும் அமைதி பேச்சுவார்த்தையும் ஒருசேர நடத்த முடியாது. பயங்கரவாதத்தை ஒழிப்பது மட்டும்தான் பாகிஸ்தான் உடன் ஒரே பேச்சு என்று ஆவேசமாக தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: பாக். திட்டத்தை தவிடுபொடியாக்கிய இந்தியா.. பதிலடி தாக்குதல் முயற்சியில் படுதோல்வி!!