தீவிரவாதத்தையும் பேச்சுவார்த்தையையும் ஒரே நேரத்தில் நடத்த முடியாது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ஆபரேஷன் சிந்தூர் தாக்குதல், பாகிஸ்தானுடனான தாக்குதல், போர் நிறுத்தம் தொடர்பாக பிரதமர் மோடி தொலைக்காட்சி வழியாக நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அதன் ஒரு பகுதி வருமாறு:
"இந்தியாவின் தாக்குதலில் கொல்லப்பட்ட தீவிரவாதிகளின் இறுதி மரியாதை நிகழ்வில் பாக். ராணுவ அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர். பாகிஸ்தானுக்கு எதிரான போரில் ஒவ்வொரு முறையும் இந்தியா வெற்றி பெற்று வந்துள்ளது. பாகிஸ்தானுக்கு எதிரான தாக்குதலில் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை என்பது புதிய மைல் கல். தீவிரவாதத்துக்கு ஆதரவாக பாகிஸ்தான் அரசும், ராணுவமும் செயல்பட்டால் ஒருநாள் அந்த நாடு அழிந்து விடும்.

தீவிரவாதத்தையும் பேச்சுவார்த்தையையும் ஒரே நேரத்தில் நடத்த முடியாது. அதேபோல்தான் தீவிரவாதத்தையும் வணிகத்தையும் ஒரே நேரத்தில் நிகழ்த்த முடியாது. பாகிஸ்தான் உயிர்த்திருக்க வேண்டுமென்றால் தீவிரவாதத்தை முற்றிலும் அழிக்க வேண்டும். பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடைபெறுமானால் தீவிரவாதம், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பற்றி மட்டுமே நிகழும். இது போருக்கான காலமும் இல்லை. அதே நேரத்தில் தீவிரவாத செயல்களுக்கான காலமும் இல்லை என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். வளர்ந்த இந்தியா என்ற கனவு நிச்சயம் நிகழும்; அதற்கான வலிமையை இந்தியா நிகழ்த்திக் காட்டியுள்ளது” எனப் பிரதமர் மோடி பேசினார்.

இத்தாக்குதல் நிறுத்தம் தொடர்பாக அமெரிக்க தலையீடு பற்றி பிரதமர் மோடி தனது உரையில் எதுவும் குறிப்பிடவில்லை. அமெரிக்க தலையீடு பற்றி எதிர்க்கட்சிகள் விளக்கம் கேட்டு வருகின்றன. நாடாளுமன்றத்தை கூட்டவும் வலியுறுத்தி வருகின்றன. ஆனால், அதுபற்றியும் பிரதமர் மோடி எதுவும் குறிப்பிடவில்லை.
இதையும் படிங்க: எங்க பெண்களின் குங்குமத்தை அழித்ததன் விளைவு இப்போ புரிஞ்சிருக்கும்... பிரதமர் மோடி ஆவேசம்!!
இதையும் படிங்க: மீண்டும் சீண்டினால் இந்தியாவின் உண்மையான பலத்தை பார்க்க வேண்டியிருக்கும்.. பாகிஸ்தானுக்கு பிரதமர் மோடி பகிரங்க எச்சரிக்கை!