முதலாம் இராஜேந்திர சோழனின் 1000-வது பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது. கங்கைகொண்ட சோழபுரத்தில் நடைபெறும் முப்பெரும் விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். விழாவில் வணக்கம் சோழமண்டலம் எனக் கூறிய பிரதமர் மோடி தனது உரையை தொடங்கினார்.
அப்போது, சோழ அரசர்களின் வியாபார விரிவாக்கத்தை தென்கிழக்கு ஆசியா வரை செய்திருந்தார்கள் என்றும் சிவனை வழிபாடு செய்பவன் சிவபெருமானில் கலந்து விடுகிறான் என நமது சாஸ்திரங்கள் கூறுவதாகவும் தெரிவித்தார். சிவனை வழிபடுபவன் அவரைப்போலவே அழிவற்றவனாகி விடுகிறான் என கூறப்படுவதாக பிரதமர் கூறினார்.
ராஜராஜ சோழனும், ராஜேந்திர சோழனும் தேசத்தின் அடையாளங்கள் என்று பெருமிதம் தெரிவித்தார். ராஜராஜ சோழன் ராஜேந்திர சோழன் ஆகியோர் ர் பாரதத்தின் மெய்யான வல்லமையின் பிரகடனங்கள் என்றும் கூறினார்.
இதையும் படிங்க: பகவத் கீதை இசை தொகுப்பை வெளியிட்டது பாக்கியம்! சோழ தேசத்தில் பிரதமர் மோடி உரை...

பாரதத்தின் கனவு அளிக்கும் உத்வேகத்தால் உந்தப்பட்டு வளர்ச்சி அடைந்த பாரதம் என்ற இலக்கை நோக்கி முன்னேறுகிறோம் எனவும் பெரும் பராக்கிரமன் ராஜேந்திர சோழனை நான் வாழ்த்தி வணங்குகிறேன் என்றும் தெரிவித்தார்.
ஆடி திருவாதிரை நிறைவு நாளில் நடக்கும் நிகழ்வுக்கு உதவிய அனைவருக்கும் பிரதம நன்றி கூறினார் மேலும் தோள் கொடுத்து அனைவருக்கும் நன்றியையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொண்டார். சோழ சாம்ராஜ்யத்தின் காலகட்டம் பாரதத்தின் பொற்காலம் என வரலாற்று ஆய்வாளர்கள் கூறுவதாகவும் குறிப்பிட்டார்.
இங்கிலாந்துக்கும் முன்னதாகவே குடவோலை முறை மூலம் ஜனநாயக முறையில் தேர்தல் நடைபெற்றது என்றும் நீர் மேலாண்மை பற்றி இன்று உலகெங்கும் பேசப்படும் நிலையில் நம் முன்னோர்கள் முன்னரே அறிந்து வைத்திருந்தனர் என்றும் கூறினார். ஜனநாயகத்தின் தாய் என்ற முறையில் சோழ சாம்ராஜ்யத்தினர் வளர்ச்சியை முன்னெடுத்து சென்றார்கள் என்றும் ஆங்கிலேயருக்கு முன்னதாகவே ஜனநாயகத்தின் முன்னோடியாக இருந்தவர்கள் சோழர்கள் எனவும் கூறினார்.
ராஜேந்திர சோழன் கங்கை நீரை கொண்டு வந்து நிறுவிய ஏறி தான் தற்போது பொன்னேரி என்று அழைக்கப்படுவதாகவும் ராஜேந்திர சோழனின் அடையாளமே புனித நீராம் கங்கை நீரை கொண்டு வந்து வெற்றியை பறைசாற்றியது தான் எனவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: இளையராஜாவின் இசை மழை! பார்த்து ரசித்து மகிழ்ந்த பிரதமர் மோடி!