முதலாம் இராஜேந்திர சோழனின் 1000-வது பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது. கங்கைகொண்ட சோழபுரத்தில் நடைபெறும் முப்பெரும் விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். அப்போது, வெற்றியை பறைசாற்றும் விதமாக ராஜேந்திர சோழன் கங்கைகொண்ட சோழபுரம் நகரத்தை நிறுவி கோவிலை கட்டினார் என்றும் வரலாற்று முக்கியத்துவம் கொண்ட நிகழ்வை போல் கங்கை நீரை காசியில் இருந்து கொண்டு வந்திருப்பது தனக்கு மட்டற்ற மகிழ்ச்சி அளிப்பதாகவும் கூறியுள்ளார்.
கங்கை நீரால் அபிஷேகம் செய்யப்பட்டுள்ளது என்றும் காசியின் பிரதிநிதி நான் கங்கை அன்னையின் ஆசி எனக்கு உள்ளது என்றும் கூறினார்.
சோழ அரசர்கள் பாரதத்தை கலாச்சார ஒற்றுமை என்ற அடிப்படையில் இணைத்தார்கள் என்று கூறினார். சோழ அரசர்களைப் போல் காசி தமிழ்ச் சங்கமம், சௌராஷ்டிரா தமிழ் சங்கமம் என பாஜக அரசு ஒன்றிணைத்து வருகிறது என்றார். சிங்கிள் நாடாளுமன்றத்தில் நிறுவப்பட்ட நாளான இன்று நினைக்கும் போது என் நெஞ்சம் பெருமிதத்தில் பொங்குகிறது என்று கூறிய பிரதமர், சிதம்பரம் நடராஜர் தீட்சிதர்களை இன்று நான் சந்தித்தேன் என்றும் ஆலயத்தின் பவித்திரமான பிரசாதத்தை எனக்கு அளித்ததாகவும் கூறினார்.
இதையும் படிங்க: நான் இதுக்கு தான் கங்கை நீரை கொண்டு வந்தேன்! மனம் திறந்த பிரதமர் மோடி

சிதம்பரம் நடராஜரின் ஆனந்த தாண்டவம் அறிவியல் ஆன்மீக வேரின் அடையாளம் என்று கூறிய பிரதமர் மோடி, ஆனந்த தாண்டவ நடராஜமூர்த்தி டெல்லி பாரத் மண்டபத்திற்கு அழகுக்கு அழகு சேர்த்துக் கொண்டிருக்கிறார் என்றார். சைவ பாரம்பரியம் தேசத்தின் கலாச்சாரத்தின் மிகப்பெரிய பங்களிப்பை அளித்துள்ளது என்றும் சைவ பாரம்பரியத்தின் உயிர் குள்ள மையங்களில் தமிழகம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக விளங்குகிறது என்றார்.
நாயன்மார் புனிதர்களின் சீர்மரபு, பக்தி காப்பியம், செம்மொழியாம் தமிழ், ஆதீனங்கள் புதிய யுகத்திற்கு பிறப்பளிக்கின்றன என்றும் தெரிவித்தார். உலகில் உள்ள பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வாக அமைந்துள்ளது சைவ சித்தாந்தம் என்றும் அன்பே சிவம் என்பதை உலகம் முழுவதும் கடைப்பிடித்தால் பெரும்பாலான பிரச்சினைகள் தீரும் என்றும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: பகவத் கீதை இசை தொகுப்பை வெளியிட்டது பாக்கியம்! சோழ தேசத்தில் பிரதமர் மோடி உரை...