இந்தியா - பாகிஸ்தான் இடையே நேரடி பேச்சு வார்த்தை மூலம்தான் அமைதி உடன்படிக்கை எட்டப்பட்டதாக கூறப்பட்டு வரும் நிலையில், வர்த்தகத்தை காரணம் காட்டி அணுஆயுதப் போரை நிறுத்தி விட்டதாக ட்ரம்ப் கூறியுள்ளார்.

இந்தியாவின் பாகிஸ்தானும் போரை நிறுத்தாவிட்டால் வர்த்தகம் செய்ய மாட்டோம் என கூறியதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்தார். சண்டையை நிறுத்தினால் வர்த்தகம் மேற்கொள்ளலாம் என அழைப்பு விடுத்ததாக தெரிவித்தார். அணு ஆயுதப் போர் முண்டை என்றால் லட்சக்கணக்கானோர் இறந்திருப்பார்கள். வர்த்தகத்தை தன்னைப்போல யாரும் பயன்படுத்தி இருக்க மாட்டார்கள் என பெருமிதம் கூறினார்.
இதையும் படிங்க: #BREAKING முடிவுக்கு வந்தது பதற்றம்.. போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல் அளித்தது இந்தியா!!

போரை நிறுத்துவதில் உதவியாக இருந்த துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் உள்ளிட்டவருக்கும் நன்றி தெரிவித்துக் கொண்டார். போரை நிறுத்துவதில் உறுதுணையாக இருந்து வெளியுறவுத்துறை அமைச்சர் ரூபியோவிற்க்கும் நன்றி கூறினார். பாகிஸ்தானுடன் வர்த்தகம் தொடர்பான நடவடிக்கைகள் அதிகரிக்கப்படும் என ட்ரம்ப் தெரிவித்தார். பாகிஸ்தானுடன் விரைவில் வர்த்தக பேச்சுவார்த்தை தொடங்கும் என்றும் அவர் பேசினார்.
இதையும் படிங்க: அவ்வளவுதான்... எல்லாத்தையும் சீக்கிரம் முடிச்சிடுங்க..! இந்தியாவின் தாக்குதலால் டிரம்ப் உற்சாகம்..!