ஈரான்-இஸ்ரேல் மற்றும் அமெரிக்கப் போர் உலகளவில் எரிசக்தி நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டதாலும், வளைகுடா நாடுகள் மீதான தாக்குதல்களாலும் உலகளவில் எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகம் தடைபட்டுள்ளது. இந்தியாவில் எல்பிஜி-க்கான தேவை அதிகரித்துள்ளது. அதன்பிறகு, பெட்ரோல் மற்றும் டீசல் தட்டுப்பாடும் பெரும் கவலையாக உருவெடுத்துள்ளது. இந்நிலையில் எனர்ஜி லாக்டவுன் என்ற வார்த்தை சோசியல் மீடியாக்களில் பரவலாக பரவி வருகிறது.
எரிபொருள் தட்டுப்பாட்டால் உலகின் முதல் நாடாக பிலிப்பைன்ஸ் அரசு அவசர நிலை பிரகடனம் செய்துள்ளது. வரலாற்றில் முதன்முறையாக, வணிகக் கப்பல் போக்குவரத்திற்கு பயன்படுத்தப்பட்டு வந்த ஹோர்முஸ் நீரிணை முற்றிலும் மூடப்பட்டுள்ளது. உலகளவில் பயன்படுத்தப்படும் கச்சா எண்ணெயில் 20%, இயற்கை எரிவாயுவில் 20% மற்றும் எல்பிஜி (LPG) விநியோகத்தில் 20% இந்த ஒரு பாதை வழியாகவே நடைபெறுகிறது. இதனால் நாட்டின் எரிபொருள் விநியோக கட்டமைப்பு விழத் தொடங்கினால், அதைச் சார்ந்திருக்கும் மற்ற அனைத்து நவீன துறைகளும் சீட்டுக்கட்டுகளைப் போல வரிசையாகச் சரிந்துவிடும். அது மட்டுமின்றி மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியும் ஏற்படும். எனவே, அமெரிக்கா-இரான் மோதல்கள் தொடர்ந்து மோசமாகும் பட்சத்தில் கொரோனா பெருந்தொற்றை விட மோசமான பாதிப்பாக அமையலாம் என்று நிபுணர்கள் கணிக்கின்றனர்.
இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி நாடாளுமன்றத்தில் பேசுகையில், கொரோனா பெருந்தொற்று காலத்தில் மாநில அரசுகள் ஒத்துழைப்பு அளித்தது போலவே தற்போதும் ஒத்துழைப்பு தர வேண்டும் என பேசியது பீதியைக் கிளப்பியுள்ளது. இதனால் மீண்டும் ஒரு லாக்டவுன் விதிக்கப்படக்கூடும் என்ற அச்சம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
இதையும் படிங்க: யார் அந்த சார்? - அண்ணா பல்கலைக்கழகத்தில் அடுத்த அதிர்ச்சி.. பேராசிரியர் மீது மாணவி பாலியல் புகார்...!
இதனிடையே, பிரதமர் நரேந்திர மோடி இன்று மாலை அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் காணொலி வாயிலாக ஆலோசனை நடத்தவுள்ளார். ஈரான் - இஸ்ரேல் - அமெரிக்கா இடையேயான போர் சூழலால் இந்தியாவின் பாதுகாப்பு, பொருளாதாரம் மற்றும் எரிசக்தித் தேவைகளில் ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்து விவாதிக்கப்படவுள்ளது. மேலும் வளைகுடா நாடுகளில் உள்ள இந்தியர்களின் பாதுகாப்பு, கச்சா எண்ணெய் விநியோகத்தில் ஏற்படக்கூடிய சிக்கல்கள் குறித்து மாநில அரசுகளின் தயார்நிலையை பிரதமர் கேட்டறிய உள்ளார். கொரோனா காலக்கட்டத்தை போல தற்போதைய சூழ்நிலையையும் சமாளிக்க வேண்டும் என பிரதமர் மோடி பேசியிருந்த நிலையில், மீண்டும் ஒரு லாக்டவுன் அறிவிப்பை மத்திய அரசு வெளியிடுமா என்ற அச்சம் நாட்டு மக்களிடையே ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க: குடிப்பவர்கள் வாக்கு எங்களுக்கு வேண்டாம்.. குடிமக்களின் வாக்குதான் தேவை..!! சீமான் தெறி ஸ்பீச்..!!