முதலாம் இராஜேந்திர சோழனின் 1000-வது பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது. தென்கிழக்கு ஆசியாவில் அவரது கடல்சார் பயணத்தின் ஆயிரமாவது ஆண்டு, மற்றும் கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோயிலின் கட்டுமானத் தொடக்கத்தை நினைவுகூரும் வகையில், மத்திய கலாச்சார அமைச்சகத்தின் ஆதரவுடன் ஜூலை 23 முதல் இன்று வரை ஆடி திருவாதிரை விழா ஐந்து நாள் கொண்டாட்டமாக நடைபெறுகிறது.
இதன் நிறைவு நிகழ்ச்சி இன்று நடைபெறும் நிலையில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, சோழர்களின் பாரம்பரியம் தொடர்பாகவும், பல்வேறு விவகாரங்கள் தொடர்பாகவும் பேசினார்.
அப்போது, தேசம் மரபு என்பதை அடியொற்றி பயணித்துக் கொண்டிருக்கிறது என்றும் அயல்நாடுகளில் விற்கப்பட்ட தேசத்தின் சின்னங்களை மீட்டுக் கொண்டு வந்திருக்கிறோம் எனவும் தெரிவித்தார். திருமூலரின் கொள்கையை தான் பாஜக அரசு ஒரே உலகம் ஒரே குடும்பம் ஒரே எதிர்காலம் என முன்னெடுக்கிறது என்றும் வரலாற்றின் மீது பாரதம் பெருமிதம் கொண்டுள்ளது எனவும் தேசத்தின் பாரம்பரியத்தை பாதுகாப்பதில் மிகவும் கருத்துடன் செயல்படுகிறோம் எனவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: நடராஜரின் ஆனந்த தாண்டவம் அறிவியல், ஆன்மீக வேரின் அடையாளம்! பிரதமர் மோடி நுணுக்கமான பேச்சு...

களவாடப்பட்ட நாட்டின் பாரம்பரியத்தை 10 ஆண்டுகளில் பாஜக மீட்டெடுத்துள்ளது என்றும் அப்போது கூறினார். நடராஜர், லிங்கம், அர்த்தநாரீஸ்வரர், பரமேஸ்வரி, சம்பந்தர் சிலைகள் உள்ளிட்டு 36 கலைப் பொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
நமது மரபும் சைவ சித்தாந்த தத்துவமும் பூமியுடன் நின்று போய்விடவில்லை நிலவிற்கே சிவசக்தி என பெயரிட்டு உள்ளோம் என்றார். கலை கலாச்சாரம் வர்த்தகம் என சோழர்கள் காலத்தில் பாரதம் எல்லா வகையிலும் வளர்ச்சி பெற்றது என்று கூறிய பிரதமர், சோள சாம்ராஜ்யம் வளர்ச்சியடையும் புதிய பாரதத்தின் நிர்மானத்திற்கான வரைபடம் என்றும் தெரிவித்தார். நாம் ஒற்றுமையாக இருந்து நமது நாட்டின் கடற்படை பாதுகாப்பு படையை வலிமையானதாக வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
இதையும் படிங்க: நான் இதுக்கு தான் கங்கை நீரை கொண்டு வந்தேன்! மனம் திறந்த பிரதமர் மோடி