தமிழக சட்டப்பேரவை இன்று காலை 9.30 அளவில் கூடியது. அதற்கு முன்னதாக பாமக அன்புமணி தரப்பு எம்எல்ஏக்கள் சபாநாயகர் அப்பாவுவை சந்தித்தனர். பாமக சட்டமன்ற குழு தலைவர் ஜி.கே மணியை நீக்க கோரி அன்புமணி தரப்பினர் ஏற்கனவே மனு அளித்திருந்தனர். இந்த நிலையில் தங்களது மனு மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து சபாநாயகரிடம் கேட்டறிந்தனர். சட்டமன்ற குழு தலைவராக வெங்கடேஸ்வரன் என்பவரை தாங்கள் நியமித்துள்ளதாகவும் ஜி.கே மணியை நீக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.
ஏற்கனவே கடிதம் கொடுத்திருந்த நிலையில் மீண்டும் நினைவூட்டல் கடிதத்தை கொடுத்துள்ளனர். பாமக எம்எல்ஏ அருளை நாங்கள் நீக்கி உள்ளதால் மீதமுள்ள மூன்று சட்டமன்ற உறுப்பினர்களும் அன்புமணிக்கு ஆதரவாக இருப்பதாகவும் கூறியுள்ளனர். எனவே தங்கள் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளனர்.
இதையும் படிங்க: தமிழக சட்டப்பேரவை கூட்டம்… கரூர் பெருந்துயரத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தீர்மானம்…!

இதையடுத்து பாமக சட்டமன்ற உறுப்பினர்கள் சட்டப்பேரவைகளாகத்தில் தர்ணாவில் ஈடுபட்டனர். அன்புமணி தரப்பினரான தங்களது கோரிக்கையை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் அதிகாரம் கொடுக்க வேண்டும் என்றும் முழக்கங்களை எழுப்பி போராட்டத்தை முன்னெடுத்தனர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
அன்புமணிக்கும் ராமராஸுக்கும் இடையிலான பிரச்சனையின் காரணமாக அன்புமணி ஆதரித்தவர்களை ராமதாஸ் தரப்பிலிருந்தும் ராமதாசை ஆதரிப்பவர்களை அன்புமணி தரப்பிலிருந்தும் கட்சியிலிருந்து நீக்கி வருகின்றனர். இதன் காரணமாக பாமக எம்எல்ஏ அருளை கட்சியிலிருந்தும் கட்சி பதவியிலிருந்து நீக்குவதாக அன்புமணி தரப்பினர் கூறினர். தற்போது ஜிகே மணியை பதவியில் இருந்து நீக்க வலியுறுத்தி கடிதம் கொடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: காசா இனப்படுகொலை... சட்டப்பேரவையில் இது நடக்கும்... முதல்வர் ஸ்டாலின் உறுதி!