இந்தியாவின் மராட்டிய மாநிலத்தில், நாசிக் மாவட்டத்தின் மலேகான் நகரில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவம் நாட்டையே உலுக்கிய ஒரு பயங்கரவாதத் தாக்குதலாகும்.
இஸ்லாமியர்களின் புனித நாளான ஷப்-ஏ-பராத் அன்று, மதியம் 1:45 மணியளவில், மலேகான் நகரின் ஹமீதியா பள்ளிவாசல் அருகே முதல் குண்டு வெடித்தது.
அப்போது, பராத் இரவையொட்டி ஆயிரக்கணக்கான மக்கள் தொழுகைக்காகப் பள்ளிவாசலில் கூடியிருந்தனர். அப்போது ஏற்பட்ட மூன்று குண்டுவெடிப்புகளும் உயர்ந்த அழுத்தம் மற்றும் உலோகத் துண்டுகளைக் கொண்டிருந்ததால், பயங்கரமான உயிரிழப்பையும் காயங்களையும் ஏற்படுத்தின.
இதையும் படிங்க: அரசியல்லாம் இல்ல! 100% நட்பு ரீதியான சந்திப்பு... பிரேமலதா விஜயகாந்த் பேட்டி..!
இதில் முக்கியமாக சாத்வி பிரக்யா சிங் தாக்குர் மற்றும் முன்னாள் ராணுவ அதிகாரியான லெப்டினன்ட் கர்னல் புரோகித் ஆகியோர் குற்றம்சாட்டப்பட்டனர். இந்த வழக்கில் மேலும் பலர் மீது குற்றம் சாட்டப்பட்ட நிலையில் போதிய ஆதாரங்கள் இல்லாததால் விடுவிக்கப்பட்டனர்.
இந்த நிலையில், பாஜக முன்னாள் எம்பி பிரக்யா சிங், முன்னாள் ராணுவ அதிகாரி லெப்டினன்ட் கர்னல் பிரசாத் ஸ்ரீகாந்த் உள்ளிட்ட ஏழு பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

வழக்கிலிருந்து விடுதலையான பிரக்யா சிங் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, காவல்துறையினரால் கைது செய்யப்பட்டதிலிருந்து தன்னுடைய வாழ்க்கை சீரழிக்கும் வகையில் சித்திரவதை செய்யப்பட்டதாக கூறினார்.
17 ஆண்டுகள் துறவற வாழ்க்கை நடத்திய பின்னர் மக்கள் தன்னை பயங்கரவாதியாக கருதியதாகவும், தான் ஒரு துறவியாக இருந்ததால் மட்டுமே உயிர் பிழைத்ததாகவும் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர் இந்த வழக்கில் இருந்து பகவான் தனக்காக போராடியதாகவும் குறைந்தபட்சம் இந்த நீதிமன்றம் ஆவது என் வாதத்தை கேட்டது என்றும் தெரிவித்த பிரக்யா சிங், இந்த வழக்கில் வெற்றி பெற்றது நான் அல்ல காவி தான் என்றும் இந்துத்துவாவின் வெற்றி இது எனவும் கூறினார். காவியை அவமதித்தவர்களை கடவுள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார் என்றும் அவர் தெரிவித்தார்.
இதையும் படிங்க: 21ம் நூற்றாண்டிலும் சாதி மோதல்!.. எல்லாரும் வெட்கப்படனும்... டி.கே.எஸ் இளங்கோவன் கண்டனம்..!