பிரஜ்வல் ரேவண்ணா, மதச்சார்பற்ற ஜனதா தள கட்சியின் உறுப்பினரும், முன்னாள் பிரதமர் தேவ கௌடாவின் பேரனுமாவார். 2019 மக்களவைத் தேர்தலில் ஹாசன் தொகுதியில் வெற்றி பெற்ற இவர், 2024-ல் பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுகளால் கைது செய்யப்பட்டார். இவர் மீது பல பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், அதை வீடியோவாக பதிவு செய்ததாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன.

மேலும் அந்த வீடியோவில் இருந்த பெண்களை பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் வன்கொடுமை செய்ததாக ஹாசன் ஒலேநரசிப்புரா காவல் நிலையத்தில் வழக்கு பதியப்பட்டது. இதனையடுத்து சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரணை நடந்தது. இதன்பேரில், பிரஜ்வல் ரேவண்ணா மீது 4 பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. மேலும் அவர் 2024 ஏப்ரலில் கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார். இந்த வழக்குகள் தொடர்பாக ஜெர்மனியில் தலைமறைவாக இருந்து பின்னர் பெங்களூர் திரும்பிய அவர் கைது செய்யப்பட்டார்.
இதையும் படிங்க: #BREAKING: தேவகவுடா பேரன் குற்றவாளி... தீர்ப்பை கேட்டு கண்ணீர் விட்ட பிரஜ்வல் ரேவண்ணா
இதன் பின்னர் கடந்த 14 மாதங்களாக பிரஜ்வல் ரேவண்ணா சிறையில் இருந்து வருகிறார். பிரஜ்வல் மீதான வழக்குகளில் மைசூர் கே.ஆர்.நகரை சேர்ந்த 48 வயது பணிப்பெண்ணை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கும் ஒன்று. இந்த வழக்கில் எஸ்.ஐடி போலீசார் விசாரணையை முடித்து பெங்களூர் மக்கள் பிரதிநிதிகள் சிறப்பு நீதிமன்றத்தில் 2 ஆயிரம் பக்கங்களை கொண்ட குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர்.
இந்த வழக்கு விசாரணை நேற்று முடிந்த நிலையில், நீதிபதி சந்தோஷ் கஜானன பட், பிரஜ்வல் ரேவண்ணா குற்றவாளி என தீர்ப்பு வழங்கினார். பணிப்பெண்ணை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த பிரஜ்வல் ரேவண்ணா குற்றவாளி என்றும், இது ஆதாரத்துடன் நிரூபணமாகி உள்ளது என்று உத்தரவிட்டார். மேலும் அவருக்கான தண்டனை விவரங்கள் நாளை (அதாவது இன்று) அறிவிக்கப்படும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.

சிறப்பு புலனாய்வுக் குழு (SIT) காவலில் உள்ள பிரஜ்வல், நீதிமன்றத்தில் தனது தண்டனைக் குறித்த விசாரணையின்போது உணர்ச்சிவசப்பட்டு அழுததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் வழக்கில், அவரது குற்றத்தை உறுதிப்படுத்த DNA மாதிரிகள் மற்றும் வீடியோ ஆதாரங்கள் முக்கிய பங்கு வகித்தன. இதனைத் தொடர்ந்து, வழக்கறிஞர்கள் பிரஜ்வலுக்கு ஆயுள் தண்டனை விதிக்க வேண்டும் என வலுவாக வாதிட்டனர்.
இந்நிலையில் பணிப்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கர்நாடகா முன்னாள் எம்.பி பிரஜ்வால் ரேவண்ணாவிற்கு வாழ்நாள் முழுவதும் ஆயுள் தண்டனை விதித்து பெங்களூர் சிறப்பு நீதிமன்ற நீதிபதி சந்தோஷ் கஜானந்த் பட் உத்தரவிட்டுள்ளார். மேலும் ஐபிசி சட்டப்பிரிவு 376 உட்பிரிவு 2(k) கீழ் வாழ்நாள் முழுவதும் ஆயுள் தண்டனை மற்றும் ரூபாய் 10 லட்சம் அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார். இந்த தண்டனை விவரத்தை கேட்ட பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள், “நீதி கிடைத்தது” என தெரிவித்துள்ளனர். இந்த வழக்கு, கர்நாடக அரசியல் களத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: ஓபிஎஸ்+தேமுதிக - திமுக கூட்டணியில் இணைகிறதா புதிய கட்சிகள்? - நெத்தியடி பதிலடி கொடுத்த துரைமுருகன்...!