தெலங்கானாவில் சாதி மறுப்பு திருமணம் செய்த மகன் மீது ஆத்திரமடைந்த தந்தை தனது கர்ப்பிணி மருமகளை வெட்டிக்கொன்ற கொடூரம் நிகழ்ந்துள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கர்ப்பிணி என்றும் பாராமல் மருமகளை மாமனார் கொலை செய்த சம்பவம் அதிர வைக்கிறது.
தெலங்கானாவில் பீம் ஆசியாபாத் மாவட்டத்தில் உள்ள தாஹேகம் மண்டலத்தில் உள்ளது கெர்ரே கிராமம். அங்கு வசித்து வருபவர் சேகர். இவர் பட்டியலின பெண் ஒருவரை காதலித்து திருமணம் செய்ததாக தெரிகிறது.

தனது மகன் சேகர் மாற்று சாதி பெண்ணை திருமணம் செய்தது சேகரின் தந்தை சட்டையாவிற்கு சிறிதும் பிடிக்கவில்லை என்று தெரிகிறது. இதனால் மகன் மற்றும் மருமகள் மீது மிகவும் ஆத்திரத்தில் இருந்துள்ளார். இதன் உச்சமாக ராணி தற்போது ஒன்பது மாத கர்ப்பிணியாக இருந்த நிலையில் சட்டையா செய்த கொடூர செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
இதையும் படிங்க: மனைவியை கொன்று நாடகமாடிய கணவன்… மயக்க ஊசி செலுத்தியது விசாரணையில் அம்பலம்…!
தனது ஒன்பது மாத நிறைமாத கர்ப்பிணி மருமகள் ராணியை இரக்கமின்றி கோடாரியால் தாக்கியுள்ளார். இந்த தாக்குதலில் பலத்த காயமடைந்த ராணி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்ததாக கூறப்படுகிறது. தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று ராணியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் சட்டையாவை கைது செய்து விசாரித்து வருகின்றனர். சாதி வெறியில் நிறைமாத கர்ப்பிணி மருமகளை கோடாரியால் அடித்து கொன்ற மாமனாரின் செயல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: BOMB வெச்சுருக்கோம்... EPS வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்... பதற்றம்...!