நம்ம நாட்டோட முன்னணி தொழிலதிபர்கள்ல ஒருத்தர் முகேஷ் அம்பானி. அவரோட தம்பி அனில் அம்பானி, வயசு 66, இப்போ பெரிய சிக்கல்ல மாட்டியிருக்கார். அனில் அம்பானி, ‘ராகாஸ்’னு சொல்ற ரிலையன்ஸ் அனில் திருபாய் அம்பானி குழுமத்தோட தலைவரா இருக்கார். இவரோட கீழ ரிலையன்ஸ் கம்யூனிகேஷன், ரிலையன்ஸ் ஹோம் பைனான்ஸ் மாதிரி பல நிறுவனங்கள் இருக்கு. ஆனா, இப்போ இவரு மேல ஒரு மாபெரும் கடன் மோசடி குற்றச்சாட்டு வந்து, அமலாக்கத்துறை (ஈ.டி.) கையில மாட்டியிருக்கார்.
2017-19 காலகட்டத்துல, அனில் அம்பானியோட ராகாஸ் நிறுவனங்களுக்கு யெஸ் வங்கி 3,000 கோடி ரூபாய் கடன் கொடுத்துச்சு. இந்த கடனை, ஒரு நிறுவனத்தோட பேருல வாங்கி, சட்டவிரோதமா வேற நிறுவனங்களுக்கு மாற்றி, திருப்பி கட்டாம சிக்கல்ல விழுந்தாங்க. இதுல முக்கியமா, ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் (ஆர்.காம்) 14,000 கோடி ரூபாய்க்கு மேல கடன் மோசடி செஞ்சதா புகார். இதே மாதிரி, ரிலையன்ஸ் ஹோம் பைனான்ஸ் (ஆர்.எச்.எப்.எல்.) நிறுவனமும் 7,000 கோடி ரூபாய் கடனை தொடர்புடைய நிறுவனங்களுக்கு மாற்றி, முறைகேடு செஞ்சதா குற்றச்சாட்டு. ஒட்டுமொத்தமா 17,000 கோடி ரூபாய் மோசடினு சொல்றாங்க.
இதுல பெரிய ட்விஸ்ட், இந்த கடன்களை வாங்குறதுக்கு வங்கி அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்கப்பட்டதா சந்தேகம். யெஸ் வங்கியோட முன்னாள் தலைவர் ராணா கபூர் இந்த வழக்குல முக்கிய குற்றவாளியா சொல்றாங்க. கடன் கொடுக்குறதுக்கு முன்னாடி, வங்கி அதிகாரிகளோட தனிப்பட்ட கணக்குகளுக்கு பணம் போயிருக்குனு ஈ.டி. கண்டுபிடிச்சிருக்கு. இதோட, கடன் வாங்கின சில நிறுவனங்கள், “ஷெல் கம்பெனி”னு சொல்ற புரோஃபைல் இல்லாத, ஒரே முகவரி, ஒரே இயக்குநர்கள் இருக்குற நிறுவனங்களா இருந்ததும் பெரிய சந்தேகத்தை கிளப்புது.
இதையும் படிங்க: சூதாட்ட செயலி வழக்கு.. ED அலுவலகத்தில் ஆஜரான பிரகாஷ் ராஜ்.. கிடுக்குப்பிடி விசாரணை..!!

இந்த விவகாரத்துல ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (எஸ்.பி.ஐ.) ஆர்.காமையும், அனில் அம்பானியையும் “மோசடியாளர்”னு அறிவிச்சு, ரிசர்வ் வங்கிக்கு ரிப்போர்ட் பண்ணுச்சு. கடந்த ஜூலை 24ல இருந்து 26 வரை, ஈ.டி. அதிகாரிகள் மும்பை, டெல்லில 35க்கு மேற்பட்ட இடங்கள்ல, 50 நிறுவனங்கள், 25 பேரு தொடர்பான இடங்கள்ல சோதனை நடத்துச்சு. இந்த சோதனையில, கடன் ஒப்புதல் ஆவணங்கள் பின்தேதி போட்டது, முறையான சரிபார்ப்பு இல்லாம கடன் கொடுத்தது, பணத்தை திசை திருப்பியது மாதிரியான முறைகேடுகள் கண்டுபிடிக்கப்பட்டு இருக்கு.
இப்போ, இந்த வழக்கு தொடர்பா ஆகஸ்ட் 5ம் தேதி டெல்லில உள்ள ஈ.டி. தலைமையகத்துல நேர்ல ஆஜராகி விசாரணைக்கு ஒத்துழைக்க சொல்லி அனில் அம்பானிக்கு சம்மன் அனுப்பியிருக்காங்க. இந்த விசாரணையில அவரு, ரிலையன்ஸ் ஹோம் பைனான்ஸ், ரிலையன்ஸ் கமர்ஷியல் பைனான்ஸ் மாதிரி நிறுவனங்களுக்கு கொடுக்கப்பட்ட கடன்கள், அதை திசை திருப்பியது பத்தி விளக்கம் கொடுக்கணும்.
அனில் அம்பானி தரப்போ, “நான் 2019ல ஆர்.காம்ல இருந்து ராஜினாமா பண்ணிட்டேன், இப்போ எந்த நிறுவனத்தோட போர்டுலயும் இல்லை”னு சொல்றாங்க. ஆனா, ஈ.டி. இதை ஏத்துக்கல. மேலும், சேபி, நேஷனல் ஹவுசிங் பாங்க், பாங்க் ஆஃப் பரோடா மாதிரி நிறுவனங்களோட ரிப்போர்ட்டும் இந்த வழக்குக்கு பலம் சேர்க்குது. இந்த மோசடி விவகாரம், பங்குதாரர்கள், முதலீட்டாளர்கள், வங்கிகளோட நம்பிக்கையை உலுக்கியிருக்கு. இந்த வழக்கு எங்க போய் முடியும்னு பொறுத்திருந்து பார்க்கணும்.
இதையும் படிங்க: அரசியல் சண்டையை தேர்தல்ல வச்சிக்கோங்க!! அமலாக்கத்துறையை ஆயுதமா யூஸ் பண்ணாதீங்க!!