அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மாவோட டில்லி வீட்டில் மூட்டை மூட்டையா பணம் எரிஞ்சு கிடந்த விவகாரம், இந்திய நீதித்துறையில் பெரிய சர்ச்சையை கிளப்பியிருக்கு. இதை விசாரிக்க, லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா, ஆகஸ்ட் 12, 2025-ல் மூணு பேர் கொண்ட ஒரு விசாரணைக் குழுவை அறிவிச்சிருக்கார்.
இந்தக் குழுவுல உச்ச நீதிமன்ற நீதிபதி அரவிந்த் குமார், சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி மணிந்தர் மோகன் ஸ்ரீவஸ்தவா, கர்நாடக மூத்த வழக்கறிஞர் பி.வி. ஆச்சார்யா ஆகியோர் இருக்காங்க. இவங்க அறிக்கை வரும் வரை, இந்த விவகாரத்துல மேற்கொண்டு நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்பட்டிருக்கு.
இந்த விவகாரம் ஆரம்பிச்சது மார்ச் 14, 2025-ல். அன்னிக்கு யஷ்வந்த் வர்மா, டில்லி உயர் நீதிமன்ற நீதிபதியா இருந்தப்போ, அவரோட அதிகாரப்பூர்வ வீட்டுல (30, துக்ளக் கிரசென்ட்) ஒரு ஸ்டோர் ரூம்ல தீ விபத்து ஏற்பட்டது. அப்போ வர்மாவும் அவரோட மனைவியும் வீட்டுல இல்லை.
இதையும் படிங்க: கட்டுக்கட்டாய் பணம் சிக்கிய விவகாரம்.. சுப்ரீம் கோர்ட் நடவடிக்கையால் நீதிபதி யஷ்வந்துக்கு சிக்கல்..!
தீயணைப்பு வீரர்களும், போலீசாரும் தீயை அணைச்சப்போ, அந்த அறையில் பல மூட்டை மூட்டையா 500 ரூபாய் நோட்டுகள் எரிஞ்சு சாம்பலாகி கிடந்தது. இந்த வீடியோ ஆதாரமும் மீடியாவுல வெளியாகி, பெரிய பரபரப்பை உருவாக்கியது.
இந்த சம்பவம் உச்ச நீதிமன்றத்தின் அப்போதைய தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னாவுக்கு தெரிவிக்கப்பட்டு, உடனே ஒரு மூணு பேர் குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழு, பஞ்சாப் & ஹரியானா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஷீல் நாகு, இமாச்சல பிரதேஷ் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஜி.எஸ். சந்தவாலியா, கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி அனு சிவராமன் ஆகியோர் இடம்பெற்று, விசாரணை நடத்தி மே 3, 2025-ல் அறிக்கை சமர்ப்பிச்சது.

இந்த அறிக்கை, “வர்மாவோ அவரோட குடும்பமோ அந்த ஸ்டோர் ரூமை மறைமுகமா அல்லது நேரடியா கட்டுப்படுத்தினாங்க. இது பொது நம்பிக்கையை குலைக்குற மோசடியா இருக்கு,”னு குற்றம்சாட்டியது. வர்மா இதை மறுத்து, “அந்த ஸ்டோர் ரூம் பொது இடம், ஊழியர்கள், வெளியாட்கள் எல்லாரும் உபயோகிக்குற இடம். அங்க பணம் இருந்தது எனக்கோ, என் குடும்பத்துக்கோ தெரியாது. இது என் மீது சதி,”னு சொல்லியிருக்கார்.
மேலும், CCTV காட்சிகள் இல்லாம போனதையும், விசாரணை நியாயமா நடக்கலனு குற்றம்சாட்டி, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். ஆனா, ஆகஸ்ட் 7-ல் உச்ச நீதிமன்றம், “வர்மாவோட நடத்தை நம்பிக்கையை ஏற்படுத்தல. விசாரணை அறிக்கை செல்லுபடியாகுது,”னு அவரோட மனுவை தள்ளுபடி செஞ்சது.
இதையடுத்து, தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா, வர்மாவை பதவி விலக சொன்னார். ஆனா, வர்மா அதை மறுத்துட்டார். இதனால, மே 8-ல், கன்னா இந்த அறிக்கையை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுக்கும், பிரதமர் நரேந்திர மோடிக்கும் அனுப்பி, பதவி நீக்க நடவடிக்கை எடுக்க சிபாரிசு செஞ்சார்
இந்த விவகாரத்துல, 146 எம்.பி-க்கள், ரவிசங்கர் பிரசாத், ராகுல் காந்தி, டி.ஆர்.பாலு, சுப்ரியா சுலே உள்ளிட்டோர் கையெழுத்திட்டு, லோக்சபாவில் பதவி நீக்க தீர்மானத்தை கொடுத்தாங்க. ராஜ்யசபாவிலும் 63 எம்.பி-க்கள் இதே மாதிரி மனு கொடுத்தாங்க.
இதை ஏற்று, ஓம் பிர்லா, நீதிபதிகள் விசாரணைச் சட்டம் 1968-ன்படி, இந்த மூணு பேர் குழுவை அமைச்சிருக்கார். இந்தக் குழு, நியாயமான விசாரணை நடத்தி, குற்றச்சாட்டுகளை ஆராய்ந்து, அறிக்கை கொடுக்கும். அதன் அடிப்படையில், பாராளுமன்றத்தின் இரு அவைகளும் மூணில இரண்டு பெரும்பான்மையோடு தீர்மானத்தை நிறைவேத்தினா, குடியரசுத் தலைவரால் வர்மா பதவி நீக்கம் செய்யப்படுவார்.
இதையும் படிங்க: ஏதாச்சும் நம்புற மாதிரி இருக்கா? பணமூட்டை சிக்கிய விவகாரம்.. நீதிபதிகள் காட்டம்..!