புதுடெல்லி: நேற்று நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தேர்தல் சீர்திருத்தம் பற்றி பேசினார். அவர் பாஜகவையும் தேரடியாகத் தாக்கினார். “வாக்கு திருட்டு நடக்குது. போலி வாக்காளர்கள் நிரம்பி வழியுது. CCTV காட்சியை 45 நாள்ல அழிச்சிடுறாங்க. EVM-ஐ பார்க்கக் கூட விட மாட்டேங்குறாங்க. இதெல்லாம் ஏன்?” என்று கேட்டார்.
அவர் மூன்று பெரிய கேள்விகளை மோடி-அமித் ஷாவிடம் கேட்டார்:
ராகுல் சொன்னார்: “இது வெறும் குற்றச்சாட்டு இல்லை. ஆதாரத்தோட சொல்றேன். RSS-பாஜக எல்லா அமைப்பையும் கைப்பற்றிட்டாங்க. தேர்தல் கமிஷனும் அவங்க கைப்பாவையா மாறிட்டது.” இந்தக் கேள்விகளுக்கு 24 மணி நேரம் கழிச்சும் பாஜகவுல இருந்து ஒரு வார்த்தை கூட பதில் வரல. பிரதமர் மோடி, அமித் ஷா, மத்த எம்பிக்கள் எல்லாரும் மௌனமா இருக்காங்க.
இதையும் படிங்க: SIR-ஐ சமாளிக்கிறது எப்படி? 12 மாநில தலைவர்களுடன் ராகுல்காந்தி ஆலோசனை! செல்வப்பெருந்தகை ஆஜர்!
அதுக்கு பதிலா என்ன பண்ணாங்க தெரியுமா? ராகுல் டிசம்பர் 15-ல ஜெர்மனி போறார்னு செய்தி வந்ததும், “பாராளுமன்றம் நடக்கும்போதே விடுமுறை டூர் போறாரு, பர்யட்டன் லீடர்”னு டிரோல் பண ஆரம்பிச்சிட்டாங்க. கங்கனா ரணாவத், ஷெஹ்ஜாத் பூனாவாலா எல்லாம் X-ல போட்டு தாளிச்சி எடுத்துட்டாங்க.

இதுக்கு காங்கிரஸ் எம்பி கௌரவ் கோகோய் நச்ஸா பதிலடி கொடுத்திருக்கார்: “ராகுல் கேட்ட கேள்விக்கு பாஜகவுக்கும் மோடிக்கும் பதில் இல்லை. அதான் ஜெர்மனி டூர் பத்தி டிரோல் பண்றாங்க. மோடி ஒரு வருஷத்துல 20-25 நாடு சுத்தி வரும்போது யாரும் கேள்வி கேக்கலையே? ராகுல் காங்கிரஸ் நிகழ்ச்சிக்கு போறது தப்பா? ஜனநாயகம் ஆபத்துல இருக்கு. ராகுல் அதை காப்பாத்த குரல் கொடுப்பார். பதில் சொல்ல முடியாத பாஜக இப்படி குழப்பம் பண்ணிட்டே இருக்கும்!”
காங்கிரஸ் தரப்பு மேலும் சொல்வது: ராகுல் ஜெர்மனியில இந்தியர்களோட சந்திப்பு, ஜெர்மன் அமைச்சர்களோட பேச்சு இருக்கு. இது அதிகாரப்பூர்வ பயணம் இல்லை, கட்சி நிகழ்ச்சி மட்டும் தான். அதுல என்ன தப்பு?
இப்போ சமூக வலைதளத்துல #RahulAskedBJPNoAnswer, #GermanyTripDrama ரெண்டும் ட்ரெண்ட் ஆகிட்டு இருக்கு. நாடாளுமன்றம் இன்னும் 10 நாள் நடக்குது. ராகுல் ஜெர்மனியில இருந்தே பதிலடி கொடுப்பாரா? இல்ல பாஜக இதே டிரோல்ல தொடருமா? பொறுத்திருந்து தான் பார்க்கணும்!
இதையும் படிங்க: பயிரை பார்க்காமல் ரயில் ஏறி போனவர் உதயநிதி… திமுக அரசால் வாடிய விவசாயிகள்.. எடப்பாடி பழனிச்சாமி விமர்சனம்…!