ராகுல் காந்தி, இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவராக, பல்வேறு சந்தர்ப்பங்களில் தனது பேச்சுகள் மற்றும் பிரசாரங்களின் மூலம் சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்ததாகக் கூறி அவர் மீது பல அவதூறு வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இவை பெரும்பாலும் பாஜக தலைவர்கள், ஆர்எஸ்எஸ் உறுப்பினர்கள் அல்லது பிற அமைப்புகளால் தொடரப்பட்டவை. 2019 மக்களவைத் தேர்தல் பிரசாரத்தின்போது, கர்நாடகாவின் கோலாரில் நடந்த பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி, நீரவ் மோடி, லலித் மோடி, நரேந்திர மோடி … எப்படி எல்லோருக்கும் மோடி என்ற குடும்பப் பெயர் இருக்கிறது? எல்லா திருடர்களுக்கும் மோடி என்ற பெயர் எப்படி இருக்கிறது? என்று கேள்வி எழுப்பினார். இது மோடி சமூகத்தினரை இழிவுபடுத்துவதாக கருதப்பட்டு, குஜராத் பாஜக எம்எல்ஏ புர்னேஷ் மோடி சூரத் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்தார்.

இதையடுத்து சூரத் நீதிமன்றம் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தது. இதனால், மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் பிரிவு அவரது நாடாளுமன்ற உறுப்பினர் பதவி தகுதி நீக்கம் செய்யப்பட்டது. இருப்பினும், உச்ச நீதிமன்றம் 2023 ஆகஸ்ட் 4 அன்று இந்த தண்டனைக்கு இடைக்கால தடை விதித்து, அவரது எம்பி பதவி மீட்டெடுக்கப்பட்டது. இந்த நிலையில், இந்தியா சீனா இடையே மோதல் நிலவிய காலத்தில் எல்லை கட்டுப்பாட்டு கோட்டுப்பகுதி சூழ்நிலையை மத்திய அரசு முறையாக கையாள வில்லை என்று ராகுல் காந்தி அறிக்கை வெளியிட்டு இருந்தார். 2022 ஆம் ஆண்டு டிசம்பர் 16ஆம் தேதி இந்த குற்றச்சாட்டை முன்வைத்து காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி அறிக்கை வெளியிட்டார். இந்த நிலையில், இந்திய ஆயுதப்படையின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படும் வகையில் ராகுல் காந்தி கருத்து தெரிவித்ததாக கூறி எல்லைப் பாதுகாப்புப் படையில் பணியாற்றி ஓய்வுபெற்ற உதய்சங்கர் ஸ்ரீ வஸ்தவா என்பவர் லக்னோ நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் ராகுல் காந்திக்கு சம்மன் அனுப்பப்பட்டது. இதனை விசாரித்த நீதிமன்றம், அவருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது. இதை எதிர்த்து அவர் அலகாபாத் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில் அவரது சம்மன் ரத்து செய்ய நீதிமன்றம் மறுத்தது. இந்த நிலையில் லக்னோ நீதிமன்றத்தில் ராகுல் காந்தி என்று ஆஜரான நிலையில் அவருக்கு ஜாமீன் வழங்கி மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதையும் படிங்க: பிரதமர் மோடிக்கு இது மட்டும் தான் கரெக்ட்டா வரும்.. விளாசிய ராகுல் காந்தி..!
இதையும் படிங்க: யாரா இருந்தா என்ன? கேரளப் பெண்ணின் உயிரை காப்பாத்தணும்.. அவ்வளவுதான் - கே.சி வேணுகோபால்..!