சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தும் மத்திய அரசின் அறிவிப்புக்கு காங்கிரஸ் கட்சியும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியும் வரவேற்று பாராட்டுத் தெரிவித்துள்ள நிலையில் இந்த கணக்கெடுப்பு முறை எப்போது முடியும், முடிக்க வேண்டும் என்ற காலக்கெடுவையும் நிர்ணயிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். அது மட்டுமல்லாமல் 50 சதவீதம் வரை இடஒதுக்கீடு என்ற கட்டுப்பாட்டை மத்திய அரசு நீக்க வேண்டும், தனியார் கல்வி நிருவனங்களுக்கும் இடஒதுக்கீடு முறையை அரசியலமைப்புச் சட்டம் 15(5) பிரிவின் கீழ் அமல்படுத்த வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி கேட்டுக்கொண்டுள்ளது.

1931ம் ஆண்டுவரை சாதிவாரிக் கணக்கெடுப்பு முறை இருந்தது. ஆங்கிலேயர்கள் ஆட்சியிலும் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. ஆனால், 2ம் உலகப்போருக்குப்பின், இந்தியா சுதந்திரம் அடைந்தபின் இதுவரை சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தப்படாமல் இருக்கிறது.
இதையும் படிங்க: என்ன நடந்துச்சு சொல்லுங்க..! அமித் ஷா, உமரிடம் விசாரித்த ராகுல்.. ஆதரவாக இருப்போம் என உறுதி..!
மக்கள் தொகைக் கணக்கெடுப்பும் கடந்த 2011ம் ஆண்டுக்குப்பின் நடத்தப்படவில்லை. கொரோனா தொற்று காரணமாக தள்ளிபோடப்பட்ட மக்கள் தொகைக் கணக்கெடுப்பும் தொடர்ந்து தாமதமாகிறது. இந்நிலையில் பிரதமர் மோடி தலைமையில் நேற்று கூடிய அமைச்சரவை மக்கள்தொகை, சாதிவாரிக்கணக்கெடுப்பு நடத்த ஒப்புதல் அளித்தது.

மத்திய அரசின் திடீர் ஒப்புதலுக்கு ராகுல் காந்தி வரவேற்பும் பாராட்டும் தெரிவித்துள்ளார். மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது: “தேசிய அளவில் சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தும் மத்திய அரசின் திடீர் அறிவிப்புக்கு வரவேற்கிறேன். மகளிர் இடஒதுக்கீடு மசோதா போல் இருக்கக்கூடாது, குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் இந்த கணக்கெடுப்பை முடிக்க வேண்டும்.
சாதிவாரிக் கணக்கெடுப்புதான் நாங்கள் கேட்டது. நாங்கள் கோரியை ஏற்றுக்கொண்டதற்கு நன்றி, இதை எப்போது முடிக்கப்பட வேண்டும், பட்ஜெட் நிதி ஒதுக்கீடு போன்றவற்றையும் ஒதுக்க வேண்டும். தெலங்கானாவில் பின்பற்றப்படும் சாதிவாரிக்கணக்கெடுப்பு முறையை மத்திய அரசும் பின்பற்றலாம். தேவைப்பட்டால் மத்திய அரசுக்கு உதவவும் தெலங்கானா அரசு தயாராக இருக்கிறது. தெலங்கானாவில் கேள்விகள் தரப்பட்டு அதன்படி மக்களிடம் பதில் பெறப்படுகிறது, திறந்தவெளியில் வெளிப்படைத்தன்மையுடன் நடக்கிறது.

சில குறிப்பிட்ட அம்சங்களுடன் தேசிய அளவில் சாதிவாரிக்கணக்கெடுப்பு வர வேண்டும். கடந்த 2 ஆண்டுகளாக சாதிவாரிக் கணக்கெடுப்பு,சமூகநீதி கோரிக்கையை காங்கிரஸ் வைத்து வருகிறது. 50 சதவீதம் இடஒதுக்கீடு கட்டுப்பாடுகளை நீக்க வேண்டும். சாதவாரிக் கணக்கெடுப்பையும் கடந்து செல்ல விரும்புகிறோம். இந்த கணக்கெடுப்புக்கு எந்த அளவு தயராக இருக்கிறோம் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.
பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு யார் காரணமாக இருந்தாலும், அவர்கள் விலை கொடுக்க வேண்டும், முறையாக விலையைத் தர வேண்டும். பிரதமர் மோடி காலத்தை வீணடிக்கக்கூடாது, இதுபோன்ற முட்டாள்தனமான விஷயங்களை இந்தியா ஒருபோதும் பொறுத்துக்கொள்ளாது என்பதை தெளிவாக சொல்ல வேண்டும்” எனத் தெரிவித்தார்.

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூகே கார்கே வெளியிட்டஅறிவிப்பில் “ சாதிவாரிக் கணக்கெடுப்பை சிறப்பாக நடத்தி முடிக்க மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும், வெளிப்படைத்தன்மையுடன் விரைந்து முடிக்க வேண்டும். சாதிவாரிக் கணக்கெடுப்புடன் சேர்த்து, மக்கள் தொகைக் கணக்கெடுப்பையும் நடத்த வேண்டும். இதைத்தான் முதல் நாளிலிருந்தே நாங்கள் கோரி வருகிறோம். சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தக் கோரி நான் நாடாளுமன்றத்தில் பலமுறை எழுப்பினேன், பிரதமருக்கும் கடிதம் எழுதினேன்.
சமூகநீதித் திட்டமான இதை அமல்படுத்த பிரதமர் மோடி காலம்தாழ்த்திவிட்டார்” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: ‘தேர்தல் ஆணையமே சமரசம் செய்து கொண்டது, ‘சிஸ்டத்திலேயே’ தவறு இருக்கிறது’.. ராகுல் காந்தி குற்றச்சாட்டு..!