பாகிஸ்தான் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதால் ராஜஸ்தானில் உள்ள எல்லையோர மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் ஸ்ரீ கங்கா நகர் மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் இருக்கும் இடத்தை விட்டு நகர வேண்டாம் என மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தி உள்ளார். மின்சாரம் முற்றிலும் துண்டிக்கப்பட்டதால் பொதுமக்கள் யாரும் அச்சப்பட வேண்டாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

இது மட்டுமல்லாது பஞ்சாப் மாநிலத்தில் கல்வி நிலையங்களை மூடவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பஞ்சாப் மாநில கல்வித்துறை அமைச்சர் இந்த உத்தரவை பிறப்பித்து உள்ளார். பள்ளி, கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களை அடுத்த மூன்று நாட்களுக்கு மூட உத்தரவிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: போர் பதற்றம்..! பஞ்சாபில் உஷார் நிலை.. அடுத்தடுத்து வெளியான முக்கிய அறிவிப்புகள்..!

இந்தியா பாகிஸ்தான் இடையே தாக்குதல் சம்பவம் அதிகரித்துள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: போர் விமானங்களை நொறுக்கிய இந்தியா! பாகிஸ்தான் விமானி சிறைப்பிடிப்பு!