இந்தியாவின் மிகப் பெரிய நிறுவனமான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் (RIL) தனது 48வது ஆண்டு பொதுக்கூட்டத்தை (AGM) இன்று மும்பையில் நடத்தியது. கூட்டத்தில் பங்குதாரர்கள் மத்தியில் முகேஷ் அம்பானி, ரிலையன்ஸ் நிறுவனத்தின் வளர்ச்சி குறித்தும் எதிர்கால திட்டங்கள் தொடர்பாகவும் பேசினார். இந்தக் கூட்டத்தில் ஜியோ ஐபிஓ, செயற்கை நுண்ணறிவு (AI), சில்லறை வணிகம் மற்றும் பசுமை ஆற்றல் திட்டங்கள் குறித்த முக்கிய அறிவிப்புகள் வெளியாகின.

கூட்டத்தில் பேசிய அவர், "இன்று, ஜியோ குடும்பம் 500 மில்லியன் வாடிக்கையாளர்களைத் தாண்டியுள்ளது என்பதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் பெருமைப்படுகிறேன். 500 மில்லியன் மைல்கல் என்பது உங்கள் அசைக்க முடியாத நம்பிக்கை மற்றும் ஆதரவின் அடையாளமாகும். உங்கள் ஒவ்வொருவருக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று கூறினார்.
இதையும் படிங்க: வாயை கொடுத்து மாட்டிக்கொண்ட தாய்லாந்து பிரதமர்.. பதவி நீக்கம் செய்து கோர்ட் அதிரடி..!!
ஜியோவின் வருவாய் ரூ.1,28,218 கோடியாக ($15.0 பில்லியன்) இருந்தது, இது நிதியாண்டு-25 இல் 17% ஆண்டு வளர்ச்சியாகும்; மற்றும் EBITDA ரூ.64,170 கோடி ($7.5 பில்லியன்) ஆகும். இந்த புள்ளிவிவரங்கள் ஜியோ ஏற்கனவே உருவாக்கியுள்ள மகத்தான மதிப்புக்கு ஒரு சான்றாகும், மேலும் அது உருவாக்க விதிக்கப்பட்டுள்ளதை விட அதிக மதிப்பைக் கொண்டுள்ளது என்றார்.
முகேஷ் அம்பானி, ஜியோ இன்ஃபோகாம் 2026 முதல் பாதியில் பங்குச் சந்தையில் பட்டியலிடப்படும் என அறிவித்தார், இது நிறுவனத்தின் 4.4 மில்லியன் பங்குதாரர்களுக்கு மதிப்பை உயர்த்தும். மேலும், ரிலையன்ஸ் இன்டெலிஜன்ஸ் என்ற புதிய துணை நிறுவனம் தொடங்கப்பட்டு, AI துறையில் புரட்சிகர மாற்றங்களை ஏற்படுத்தும் என அவர் குறிப்பிட்டார். இது கல்வி, மருத்துவம் மற்றும் விவசாயம் உள்ளிட்ட துறைகளுக்கு AI சேவைகளை வழங்கும். கூகுள் மற்றும் மெட்டாவுடன் இணைந்து AI தளங்களை உருவாக்குவதற்கு ரூ.855 கோடி முதலீடு செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.
ரிலையன்ஸ் ரீடெயில் இயக்குநர் இஷா அம்பானி, இந்தியாவின் $2 டிரில்லியன் நுகர்வோர் சந்தையில் 8% ஆண்டு வளர்ச்சியைப் பயன்படுத்துவதற்கு மூலோபாய திட்டங்களை வகுப்பதாகக் கூறினார். பசுமை ஆற்றல் துறையில், சூரிய மின்சக்தி மற்றும் பசுமை ஹைட்ரஜன் உற்பத்தியை விரிவாக்குவதற்கான திட்டங்கள் வெளியிடப்பட்டன.
நிதா அம்பானி, ரிலையன்ஸ் அறக்கட்டளை 87 மில்லியன் இந்தியர்களுக்கு சேவை செய்து, 91,500 கிராமங்களில் செயல்படுவதாகத் தெரிவித்தார். நிறுவனத்தின் 2024-25 நிதியாண்டு வருவாய் ரூ.10.71 லட்சம் கோடியாக உயர்ந்து, EBITDA ரூ.1.83 லட்சம் கோடியாகவும், நிகர லாபம் ரூ.81,309 கோடியாகவும் உயர்ந்தது. ஒரு பங்குக்கு ரூ.5.50 இறுதி ஈவுத்தொகை அறிவிக்கப்பட்டது. இந்தக் கூட்டம், ரிலையன்ஸின் எதிர்கால வளர்ச்சிக்கு வலுவான அடித்தளத்தை அமைத்தது.

இதனிடையே AI தொழில்நுட்பத்துடன் கூடிய ஜியோ கணினி திட்டத்தை ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம் ஸ்மார்ட் டிவி, மானிட்டர் என எந்த ஸ்க்ரீனையும் கம்ப்யூட்டரை போன்று பயன்படுத்திக் கொள்ளலாம். வெவ்வேறு கட்டணங்கள் அடிப்படையில் ரிலையன்ஸ் இந்த சேவையை வழங்குகிறது. இதற்கு ஜியோ செட் டாப் பாக்ஸ் வீட்டில் இருப்பது என்பது அவசியமாகும். முதலீடு ஏதும் செய்யாமல் மிக எளிதான முறையில் இந்த திட்டத்தை நாம் பயன்படுத்திக் கொள்ள முடியும்.
இதையும் படிங்க: நீ சொன்னா நான் புள்ள பெத்துக்கணுமா? ஆர்எஸ்எஸ் தலைவருக்கு சீமான் பதிலடி