தமிழ் திரையுலகில் சிரிப்பின் அலைகளைத் தூண்டியவர், குணச்சித்திர வேடங்களின் மூலம் ரசிகர்களின் இதயங்களில் இடம்பிடித்தவர் நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர். அவரது திடீர் மறைவு தமிழ் சினிமா மற்றும் சின்னத்திரை ரசிகர்களை ஆழ்ந்த துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. வெறும் 46 வயதில், உடல்நலக் குறைவால் அவர் உயிர் துறந்த செய்தி, பலருக்கும் அதிர்ச்சியையும், மீளாத இழப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
தனித்துவமான நடிப்பு, உடலைப் பெயிண்ட் பூசி, ரோபோ போன்று நடனமாடும் பாணியால் ரோபோ சங்கர் என்ற பட்டத்தைப் பெற்றார். சின்னத்திரையில் இருந்து தனது பயணத்தைத் தொடங்கிய இவர், தனியார் தொலைக்காட்சிகளின் காமெடி நிகழ்ச்சிகளில் பங்கேற்று, தமிழக மக்களின் கவனத்தை ஈர்த்தார். அந்த நிகழ்ச்சிகளில் அவரது நகைச்சுவை திறன், உடல் மொழி மற்றும் காலத்தால் இணைக்கப்பட்ட வேடங்கள், ரசிகர்களை சிரிக்க வைத்தன. அது வெறும் சிரிப்புகளாக மட்டுமல்லாமல், அன்றாட வாழ்க்கையின் சிறு சிறு அனுபவங்களை பிரதிபலிக்கும் வகையில் அவரது நடிப்பு இருந்தது.
திரைப்படங்களில் ரோபோ சங்கரின் பங்களிப்பு, அளவு சிறியதாக இருந்தாலும், தாக்கம் பெரியது. அவர் நடித்த முக்கியப் படங்களில் சிலர், சில சிறு வேடங்களில் கூட அவரது இருப்பு திரைக்கு உயிர் கொடுத்தது. உதாரணமாக, சில படங்களில் அவர் ஏற்ற குணச்சித்திரப் பாத்திரங்கள் நண்பரின் நண்பன், காமெடி ரிலீஃப் அல்லது சிறு சிறு ட்விஸ்ட்களைத் தரும் கேரக்டர்கள் ரசிகர்களின் மனதில் நிலைத்தன.

தொலைக்காட்சி உலகில் அவர் பிரபலமானது கலக்கபோவது யாரு நிகழ்ச்சி ஆகியவற்றில் அவரது ஸ்டாண்ட்-அப் காமெடி, உடல் மொழி மற்றும் மிமிக்ரி அனைவரையும் கவர்ந்தது. உடல் நலக்குறைவால் சென்னை தர மணியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த ரோபோ சங்கர் நேற்று இரவு காலமானார். பல்வேறு திரைப்படங்களில் தனக்கென தனி பாணியை அமைத்து நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்த ரோபோ சங்கர் இன்று நம்முடன் இல்லை என்பது மிகுந்த வேதனையை அளிக்கிறது.
இதையும் படிங்க: அப்பா… அப்பா… வாப்பா! தந்தை போன துக்கம் தாளாமல் கதறி துடித்த இந்திரஜா…!
ரோபோ சங்கரின் மறைவையொட்டி திரை பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள், நண்பர்கள் தின பல்வேறு தரப்பினர் அவருக்கு அஞ்சலி செலுத்தினர். ரோபோ சங்கர் மிகவும் நல்ல மனிதர் என்ற வார்த்தையை தான் ஒவ்வொருவரும் கூறியுள்ளனர். அண்ணா… ரோபோ அண்ணா… எங்கள விட்டுட்டு போயிட்டியே… திரும்ப வரமாட்டியா என அனைவரும் கதறி துடித்தது காண்போரை கலங்கச் செய்தது. மறைந்த நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கரின் உடல் வளசரவாக்கத்தில் உள்ள மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
இதையும் படிங்க: நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கரின் உடல் தகனம்... காலத்தால் அழியாத கலைஞர்...!