புதுடெல்லி: லோக்சபாவில் தேர்தல் சீர்திருத்தம் குறித்த விவாதத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி நேற்று கொதித்தெழுந்தார். “ஓட்டுத் திருட்டைவிட பெரிய தேச விரோதச் செயல் வேறு இல்லை இல்லை. ஹரியானாவில் ஒரே பிரேசில் பெண்ணின் படம் 200 இடங்களில் உள்ளது!
பீஹாரில் 1.2 லட்சம் போலி வாக்காளர்கள்! இதை எல்லாம் கேட்டால் தேர்தல் கமிஷன் வாயை மூடிக்கொண்டு நிற்கிறது. ஏனென்றால் அது இனி RSS-இன் கைப்பாவை ஆகிவிட்டது!” என்று குண்டை போட்டு தொடங்கிய ராகுல், பிரதமர் மோடி – அமித் ஷாவை நேருக்கு நேர் பார்த்து 3 கடுமையான கேள்விகளையும், 4 உடனடி கோரிக்கைகளையும் வைத்தார்.
“நீங்கள் அனைத்து அமைப்புகளையும் கைப்பற்றிவிட்டீர்கள். CBI, ED, பல்கலைக்கழக துணைவேந்தர்கள்… எல்லாம் RSS காரர்கள் தான். கல்வித்தகுதி பார்க்கவில்லை, ஆமாம் சாமி சொல்பவர்களை மட்டும் போடுகிறீர்கள்.
இதையும் படிங்க: குடியுரிமை கிடைக்கிறது முன்னாடி வாக்குரிமை எப்படி? டெல்லி கோர்ட் கிடுக்குப்பிடி கேள்வி?! சோனியா காந்திக்கு சிக்கல்!
இப்போது தேர்தல் கமிஷனையும் கைப்பற்றிவிட்டீர்கள். அதனால் தான் ஹரியானாவில் தேர்தல் திருடப்பட்டது. பீஹாரில் போலி வாக்காளர்கள் நிரம்பி வழிகிறார்கள். நான் ஆதாரத்துடன் சொல்கிறேன் – இது வெறும் குற்றச்சாட்டு இல்லை, உண்மை!”
பிறகு மோடி-ஷாவை நேரடியாக சுட்டிக்காட்டி மூன்று கேள்விகளை தொடுத்தார்:
- “தேர்தல் கமிஷனர்களை தேர்ந்தெடுக்கும் குழுவில் இருந்து சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியை ஏன் நீக்கினீர்கள்? இப்போது பிரதமரும் அமித் ஷாவும் மட்டும் தான் முடிவு செய்கிறீர்களா? நான் அந்தக் குழுவில் இருந்தும் என் குரல் கேட்கப்படவில்லை!”
- “2023-ல் பதவியில் இருந்த தேர்தல் கமிஷனர்களுக்கு எதிராக எந்த வழக்கும் போட முடியாது என்று சட்டம் திருத்தினீர்கள். இதற்கு முன் எந்த பிரதமரும் கொடுக்காத இந்த ‘மகத்தான பரிசை’ மோடி ஏன் கொடுத்தார்?”
- “வாக்குச்சாவடிகளில் உள்ள CCTV காட்சிகளை 45 நாட்களில் அழிக்கும் சட்டத்தை ஏன் கொண்டு வந்தீர்கள்? இது தகவல் பாதுகாப்பு பிரச்னை இல்லை – தேர்தலை திருடியதை மறைக்கும் பிரச்னை!”

அதோடு நிற்காமல், ராகுல் 4 உடனடி கோரிக்கைகளையும் வைத்தார்:
- தேர்தலுக்கு ஒரு மாதம் முன்பு மிஷினால் படிக்கக்கூடிய வாக்காளர் பட்டியல் வெளியிட வேண்டும்.
- CCTV காட்சிகளை 45 நாட்களில் அழிக்கும் சட்டத்தை உடனே திரும்பப் பெற வேண்டும்.
- EVM-இன் உள்ளே என்ன இருக்கிறது என்று எங்கள் நிபுணர்கள் பார்க்க அனுமதி கொடுங்கள்.
- தேர்தல் கமிஷனர்களுக்கு “வேண்டுமானால் செய்யலாம்” என்ற சர்வாதிகார அதிகாரத்தை ரத்து செய்யுங்கள்.
ராகுல் பேசி முடித்ததும் லோக்சபா அதிர்ந்தது. பாஜக உறுப்பினர்கள் “பொய்… பொய்” என்று கோஷமிட்டாலும், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மேசையை தட்டி ஆரவாரம் செய்தனர். சமூக வலைதளங்களில் #RahulExposesEC, #EVMScam, #StolenElections ட்ரெண்டாகி, பல கோடி பேர் பகிர்ந்து கொண்டிருக்கின்றனர்.
இந்தியாவின் ஜனநாயகத்தை “மோடி-ஷா-ஆர்எஸ்எஸ்” கூட்டணி கைப்பற்றிவிட்டதாக ராகுல் குற்றம் சாட்டியிருப்பது, அடுத்த 2025-26 மாநிலத் தேர்தல்களுக்கு முன்பாக பெரும் புயலை கிளப்பியுள்ளது. இனி தேர்தல் கமிஷன் மவுனமாக இருக்குமா? அல்லது பதிலளிக்குமா? நாடே உற்று நோக்குகிறது!
இதையும் படிங்க: என்ன சமரசமா? மீண்டும் NDA கூட்டணியா? டிடிவி தினகரன் நச் பதில்...!