கேரளாவின் புனிதமான மலைப்பகுதியில், பத்தனம்திட்டா மாவட்டத்தில் அமைந்துள்ள சபரிமலை ஐயப்பன் கோவில், லட்சக்கணக்கான பக்தர்களின் நம்பிக்கையின் மையமாகத் திகழ்கிறது. ஆண்டுதோறும் கார்த்திகை முதல் தை வரையிலான மண்டலகாலத்தில், காட்டு வழிகளைத் தாண்டி, கடுமையான விரதங்களுடன் ஐயப்பரை அருகாறு தொட விரும்பும் பக்தர்கள் இங்கு வந்து சேர்கின்றனர். ஆனால், 2025 அக்டோபரில் வெளியான ஒரு அதிர்ச்சி நிகழ்வு, இந்தக் கோவிலின் புனிதத்தை கேள்விக்குட்படுத்தியுள்ளது. சபரிமலை ஐயப்பன் கோவில் நகை திருட்டு புகார் அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.
ஏற்கனவே உன்னிகிருஷ்ணன் என்பவர் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வரும் நிலையில் மேலும் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். சபரிமலை கோவில் துவார பாலகர்கள் சிலைகளை பதிக்கப்பட்ட தங்கத்தகடுகளை புதுப்பிக்க வேண்டும் என்பதற்காக சென்னைக்கு அனுப்பிய போது 4.600 கிலோ தங்கம் மாயமானதாக குற்றச்சாட்டு எழுந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தங்கம் மாயமான புகார் தொடர்பாக தேவசம்போர்டு 9 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்தது.

தங்கமுலாம் பூசும் செலவை ஏற்ற, கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்த தொழிலதிபர் உன்னிகிருஷ்ணன் போத்தி என்பவரிடமும் விசாரணை நடந்த நிலையில் சிறப்பு விசாரணைக் குழு அமைக்க கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. தொழிலதிபர் உன்னிகிருஷ்ணன் போத்தியின் பெயர் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்ட நிலையில் 9 அதிகாரிகள் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இதையும் படிங்க: சுவாமியே சரணம் ஐயப்பா..!! இருமுடி கட்டி.. சபரிமலை செல்கிறார் திரவுபதி முர்மு..!!
இந்நிலையில் தங்க தகடு திருட்டு வழக்கில் மேலும் ஒருவர் கைது கைது செய்யப்பட்டுள்ளார். முராரி பாபு என்பவரை கைது செய்த சிறப்பு புலனாய்வு குழுவினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திருட்டு சம்பவத்தில் வேறு யாருக்கு தொடர்பு உள்ளது என்பது தொடர்பாகவும் விசாரிக்கப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க: சிவகங்கையில் அமலுக்கு வந்தாச்சு 144 தடை.. அக்.31 வரை நீடிக்குமாம்..!! காரணம் இதுதான்..!!