சேலம் ஜாகிர் மாப்பிள்ளைத்தைச் சேர்ந்த பிரபல ரவுடி டேவிட் என்பவரை ஐந்து பேர் கொண்ட கும்பல் , ஓட ஓட விரட்டி சென்று , வெட்டி கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சேலம் மாநகரம் சூரமங்கலம் அருகே ஜாகிர் அம்மாபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் பிரபல ரவுடி டேவிட். இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். ஏற்கனவே கொலை வழக்கு ஒன்றில் இவருக்கு தொடர்பு இருப்பதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு 65 லட்சம் ரூபாய் நிலம் மோசடி செய்ததாக இவர் மீது சேலம் குற்ற பிரிவு போலீசாரிடம் புகார் கொடுக்கப்பட்டு, அதில் இவருடைய கூட்டாளிகள் சிலர் கைது செய்யப்பட்டனர்.
இதையும் படிங்க: இதென்னடா சேலத்திற்கு வந்த சோதனை... தீபாவளிக்கு முன்பே 20% ஆர்டர் குறைந்தது... வேதனையில் உற்பத்தியாளர்கள்...!
இந்த வழக்கில் முன் ஜாமின் பெற்று வெளியில் இருந்து வந்த டேவிட் இன்று காலை 11 மணி அளவில், இரு சக்கர வாகனத்தில் நண்பர் ஓட்ட இவர் பின்புறம் அமர்ந்து இரும்பாலை சாலையில்
புது ரோடு அருகே சென்றுள்ளார்.
அவரை பின்தொடர்ந்து வந்த ஐந்து பேர் கொண்ட கும்பல் திடீரென அவரை பின்புறமாக வெட்டியது. அப்போது இரு சக்கர வாகனத்தில் இருந்து கீழே சாய்ந்து விழுந்த டேவிட், சிலர் தன்னை வெட்ட முயல்வதைக் கண்ட அவர், அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார்.
ஆனால் அந்த கொலைவெறி கும்பல் அவரை விரட்டிச் சென்று சரமாரியாக வெட்டி சாய்த்தது. பின்னர் அங்கிருந்து அந்த கும்பல் தப்பி ஓடிவிட்டது. இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
தகவல் அறிந்த போலீசார் அவரது உடலை கைப்பற்றி சேலம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். சூரமங்கலம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பட்டப் பகலில் நடந்த இந்த கொலைச் சம்பவம் சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: ரூ.10 கோடி மதிப்புள்ள அரசு நிலத்தை ஆட்டையைப் போட்ட தவெக பிரமுகர்... களத்தில் இறக்கிய கம்யூனிஸ்ட்கள்... நடந்தது என்ன?