அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனின் அதிருப்தி குறித்த பேச்சு, 2025-ஆம் ஆண்டு தொடக்கத்தில் இருந்து தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கிறது. இந்த அதிருப்திக்கு முக்கியக் காரணமாகக் கருதப்படுவது, எடப்பாடி பழனிசாமியின் தலைமைப் பாணி மற்றும் கட்சி உள்ளூர் மாவட்ட அரசியலில் அவரது ஆதரவு முடிவு. குறிப்பாக, ஈரோடு மாவட்டத்தில் செங்கோட்டையனுக்கு எதிராக முன்னாள் அமைச்சர் கே.சி. கருப்பணனுக்கு எடப்பாடி ஆதரவு அளித்ததாகக் கூறப்படுவது, இந்த மோதலுக்கு முக்கியக் காரணமாக அமைந்தது.
அதிமுகவின் முக்கிய கூட்டங்களில் பங்கேற்பதை செங்கோட்டையன் புறக்கணித்து வந்ததாக கூறப்பட்டது. குறிப்பாக, கோவை மாவட்டத்தில் நடைபெற்ற அத்திக்கடவு-அவிநாசி திட்டத்திற்காக எடப்பாடி பழனிசாமிக்கு நடத்தப்பட்ட பாராட்டு விழாவையும் செங்கோட்டையன் புறக்கணித்தார்.

இருப்பினும் சமீபத்தில் செங்கோட்டையன் கட்சி நிகழ்ச்சிகளில் அவ்வப்போது பங்கேற்று வந்தார். இந்த நிலையில் ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே தனது ஆதரவாளர்களுடன் செங்கோட்டையன் ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வரும் செப்டம்பர் 5ஆம் தேதி கோபிசெட்டிபாளையம் அலுவலகத்தில் தான் மனம் திறந்து பேச இருப்பதாக தெரிவித்துள்ளார். என்ன கருத்து சொல்லப் போகிறேன் என்று அப்போது தெரிந்து கொள்ளலாம் அதுவரை பொறுத்திருங்கள் என்று கூறியுள்ளார். நேற்று அதிமுக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய செங்கோட்டையன் என்று கட்சியிலிருந்து நீக்கப்பட்ட சசிகலாவை சந்தித்ததாக தகவல் வெளியானது.
இதையும் படிங்க: செல்போன்ல கூட பேச முடியாதாம்! அதிமுக நிர்வாகிகளின் அழைப்பை ஏற்க மறுக்கும் செங்கோட்டையன்…
இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய செங்கோட்டையன், செப்டம்பர் 5 ஆம் தேதி கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்கள் அனைவரையும் சந்திக்க இருப்பதாகவும் அன்றைய தினம் மனம் திறந்து விளக்கமாக பேசுகிறேன் என்றும் தெரிவித்தார். தன்னுடைய கருத்தை தொண்டர்களின் கருத்தாக பிரதிபலிக்கப் போவதாக கூறிய செங்கோட்டையன், இன்றைய தினம் எந்த நிர்வாகிகளையும் சந்திக்கவில்லை என்றும் தொண்டர்களின் கல்யாண நிகழ்ச்சிக்கு போவதாகவும் தெரிவித்தார்.
நாளை மறுநாள் நடைபெறும் கூட்டத்திற்கு பத்தாயிரம் பேர் கூடுவார்கள் என்ற தகவல் வந்துள்ளது என்று கேட்ட கேள்விக்கு பதில் அளித்தாக, ஐந்தாம் தேதி அது உங்களுக்கே தெரியும் என்றும்., நேற்று கூட நான் யாரையும் அழைக்கவில்லை என்றும் அவர்களாகவே வந்ததாகவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: செங்கோட்டையன் எண்ணம் இதுதான்... உண்மையை போட்டு உடைத்த EX. MP சத்யபாமா