தமிழ்நாட்டின் 2026 சட்டமன்றத் தேர்தல் களத்தில் சென்னையின் வில்லிவாக்கம் சட்டமன்றத் தொகுதி தற்போது பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. தமிழக வெற்றிக் கழகம் அல்லது தமிழக வெற்றி கழகம் என்று அழைக்கப்படும் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான ஆதவ் அர்ஜுனா இத்தொகுதியில் போட்டியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.
இது தொடர்பான விவாதங்கள் மிகுந்து வரும் நிலையில், திமுக அமைச்சரும் சென்னை ஹார்பர் தொகுதி எம்எல்ஏவுமான பி.கே. சேகர்பாபு விமர்சனத்தை முன் வைத்தார். ஆதவ் அர்ஜுனா தவெகவின் தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச்செயலாளராக செயல்பட்டு வருபவர். அண்மையில் நடிகர் ரஜினிகாந்தை திமுக மிரட்டியதாக கூறிய நிலையில் பெரும் சர்ச்சை வெடித்தது.

கடுமையான கண்டனங்கள் ஆதவ் அர்ஜுனாவிற்கு தெரிவிக்கப்பட்டது. நடிகர் ரஜினிகாந்தே இத்தனை யாரும் மிரட்டவில்லை என்றும் ஆதவ் அர்ஜுனாவிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலும் அறிக்கை வெளியிட்டு இருந்தார். இதனிடையே இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, ஒரு காலத்தில் லீடர், லீடர் என்று கை கட்டி கொண்டு நின்றவன்., எதை வேண்டுமென்றாலும் பேசலாம் என்ற நோக்கத்தோடு பேசுகின்றனர் என்றார்.
இதையும் படிங்க: நான் தான் சொன்னேன்ல.! இபிஎஸ் டெல்லி பயணம்..! முதல்வர் ஸ்டாலின் கடும் விமர்சனம்..!!
நயவஞ்சகத்தோடு சுற்றி திரியும் கூட்டத்திற்கு வில்லிவாக்கத்தில் தக்க பதிலடி கொடுக்கப்படும் என்று தெரிவித்தார். ஆதவ் அர்ஜூனா வில்லிவாக்கத்தில் போட்டியிடுவதாக செய்தி வெளியான நிலையில் அமைச்சர் சேகர்பாபு சூளுரைத்து உள்ளார். விஜய் பெரம்பூர் தொகுதியில் போட்டியிட இருப்பதாக கூறப்பட்டு வரும் சூழ்நிலையில் ஆதவ் அர்ஜுனா வில்லிவாக்கம் தொகுதியில் போட்டியிடுவார் என்று பரவலாக பேசப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: "எமனாகும் திமுக" ... காமுகர்களின் கூடாரமா அறிவாலயம்?.. வெளுத்து வாங்கிய தவெக..!!